Recent Post

6/recent/ticker-posts

தோஹா டைமண்ட் லீக்கில் 16வது சீசன் - நீரஜ் சோப்ரா 90.23 மீ தூரம் ஈட்டி எறிந்து சாதனை / 16th season of Doha Diamond League - Neeraj Chopra sets record with javelin throw of 90.23m

தோஹா டைமண்ட் லீக்கில் 16வது சீசன் - நீரஜ் சோப்ரா 90.23 மீ தூரம் ஈட்டி எறிந்து சாதனை / 16th season of Doha Diamond League - Neeraj Chopra sets record with javelin throw of 90.23m

கத்தார் நாட்டின் தோஹாவில் நடைபெற்று வருகிறது டைமண்ட் லீக் தடகளத்தின் 16 ஆவது சீசன். இந்த போட்டியில் கிஷோர் ஜெனா, பாருல் சௌத்ரி, குல்வீர் சிங் உள்ளிட்ட வீரர்கள் பங்கேற்றனர்.

இவர்களுடன் ஹரியாணாவை சேர்ந்தவரும், டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் ஈட்டி எறிதலில் தங்கம் பதக்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்தவருமான நீரஜ் சோப்ராவும் களம் கண்டார் .

தோஹா டைமண்ட் லீக்கில் முதல் முயற்சியில் 88.40 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்த நீரஜ் சோப்ரா , தொடர்ந்து இரண்டாவது முயற்சியில் 'நோ த்ரோ' என்றானதால் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை. மூன்றாவது முயற்சியில் 90.23 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்தார்.

இந்தவகையில், தனது 18 ஆவது டைமண்ட் போட்டியில் , 90.23 மீ தூரம் ஈட்டி எறிந்து சாதனை படைத்துள்ள்ளார். இதன்மூலம், இந்த சாதனையை எட்டிய மூன்றாவது ஆசிய வீரர் மற்றும் ஒட்டுமொத்தமாக 25-வது வீரர் என்ற என்ற பெருமையையும் பெற்றார், நீரஜ் சோப்ரா.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel