பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், 2025-26-ம் நிதியாண்டிற்கான மாற்றியமைக்கப்பட்ட வட்டி மானியத் திட்டத்தின் கீழ், வட்டி மானியம் தொடர்பான அம்சங்களைத் தொடர இன்று ஒப்புதல் அளிக்கப்பட்டது. மேலும், தேவையான நிதி ஒதுக்கீடு செய்வதற்கான ஏற்பாடுகளுக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
மாற்றியமைக்கப்பட்ட வட்டி மானியத் திட்டம் என்பது வேளாண் கடன் அட்டை மூலம் குறைவான வட்டி விகிதத்தில் விவசாயிகளுக்கு குறுகிய கால கடன் கிடைப்பது உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்ட மத்திய அரசின் திட்டமாகும்.
இத்திட்டத்தின் கீழ் விவசாயிகள் வேளாண் கடன் அட்டைகள் மூலம் 7% மானிய வட்டி விகிதத்தில் ரூ.3 லட்சம் வரை குறுகிய கால கடன்களைப் பெற்றுள்ளதுடன், தகுதியுள்ள கடன் வழங்கும் நிறுவனங்களுக்கு 1.5% வட்டி மானியமும் வழங்கப்பட்டது.
கூடுதலாக, கடன்களை உடனடியாக திருப்பிச் செலுத்தும் விவசாயிகள், வேளாண் கடன் அட்டை மூலம் பெறப்பட்ட கடன்களுக்கான வட்டி விகிதத்தை 4% - மாகக் குறைக்கும் வகையில், உரியமுறையில் திருப்பிச் செலுத்துவதற்கான ஊக்கத்தொகை என 3% வரை ஊக்கத்தொகையைப் பெறத் தகுதியுடையவர்கள் ஆவர்.
கால்நடை வளர்ப்பு அல்லது மீன்பிடித் தொழிலுக்காக பிரத்தியேகமாக பெறப்பட்ட கடன்களுக்கு, வட்டி பலனாக ரூ.2 லட்சம் வரை பொருந்தும்.
0 Comments