டிரம்ப் அமெரிக்க அதிபரான பிறகு, பல்வேறு நாடுகளின் மீது பழிக்குப் பழி நடவடிக்கையாக வரி விதித்துள்ளார். இதன் விளைவாக இந்திய பொருளாதாரமும் பாதிக்கப்படும் என எஸ் அண்ட் பி ரேட்டிங் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆசிய பசிபிக்கில் உள்ள நாடுகளில் சீனாவின் பொருளாதார வளர்ச்சி நடப்பு ஆண்டில் 0.7 சதவீதம் சரிந்து 3.5 சதவீதமாக இருக்கும்.
அடுத்த ஆண்டில் இது 3 சதவீதமாக இருக்கும். இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி நடப்பு 2025-26 நிதியாண்டில் 6.3 சதவீதமாக இருக்கும் என தெரிவித்துள்ளது. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.5 சதவீதமாக இருக்கும் என இந்த நிறுவனம் முன்பு கணித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
0 Comments