2025 ஏப்ரல் மாதத்திற்கான இந்திய தொழில்துறை உற்பத்திக் குறியீடு (ஐஐபி) வளர்ச்சி விகிதம் 2.7 சதவீதமாகும். இது 2025 மார்ச் மாதத்தில் 3.0 சதவீதமாக இருந்தது.
2025 ஏப்ரல் மாதத்தில் சுரங்கம், உற்பத்தி, மின்சாரம் ஆகிய மூன்று துறைகளின் வளர்ச்சி விகிதங்கள் முறையே (-)0.2 சதவீதம், 3.4 சதவீதம் மற்றும் 1.1 சதவீதம் ஆகும்.
ஐஐபி-யின் விரைவு மதிப்பீடுகள் 2024 ஏப்ரல் மாதத்தில் 148.0 ஆக இருந்ததை விட 152.0 ஆக உள்ளது. 2025 ஏப்ரல் மாதத்தில் சுரங்கம், உற்பத்தி மற்றும் மின்சாரத் துறைகளுக்கான தொழில்துறை உற்பத்தி குறியீடுகள் முறையே 130.6, 149.5 மற்றும் 214.4 ஆக உள்ளன.
2025 ஏப்ரல் மாதத்தில் முதல் மூன்று நேர்மறையான பங்களிப்பாளர்கள் - “அடிப்படை உலோகங்களின் உற்பத்தி” (4.9%), “மோட்டார் வாகனங்கள், டிரெய்லர்கள் மற்றும் பகுதி அளவிலான டிரெய்லர்களின் உற்பத்தி” (15.4%) மற்றும் “இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள் போன்றவற்றின் உற்பத்தி” (17.0%) ஆகும்.
0 Comments