வடகிழக்கு மாநிலங்களைப் பொருளாதார வளர்ச்சிக்கான வாய்ப்புகளின் தளமாக முன்னிலைப்படுத்துவதன் மூலம் சர்வதேச மற்றும் உள்நாட்டு முதலீடுகளை ஈர்த்து, முதலீட்டாளர்கள், கொள்கை வகுப்பாளர்கள் துறை சார்ந்த நிபுணர்கள் ஆகியோரை ஒரே மேடையில் ஒன்றிணைக்கும் நோக்குடன், பிரதமர் திரு நரேந்திர மோடி, புதுதில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் வடகிழக்கு மாநிலங்களின் எழுச்சிமிகு முதலீட்டாளர்கள் உச்சி மாநாட்டை இன்று தொடங்கி வைத்தார்.
மே 23 முதல் 24-ம் தேதி என இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த உச்சி மாநாட்டின் முக்கிய நிகழ்ச்சிகளாக அமைச்சர்கள் கலந்து கொள்ளும் அமர்வு, வர்த்தகத்தில் இருந்து அரசுக்கு என்ற அமர்வு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. இதில் வடகிழக்கு மாநிலங்களின் ஒத்துழைப்புடன் மத்திய அரசால் பல்வேறு ஆலோசனைக் கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
0 Comments