மும்பையில் உள்ள ஜியோ உலக மையத்தில் இந்தியாவின் முதலாவது உலக ஒலி, ஒளி மற்றும் பொழுதுபோக்கு உச்சி மாநாட்டை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார்.
வேவ்ஸ் 2025 என்பது "படைப்பாளர்களை இணைத்தல், நாடுகளை இணைத்தல்" என்ற முழக்கத்துடன் நடைபெறும் நான்கு நாள் உச்சிமாநாடு ஆகும். இது உலகெங்கிலும் உள்ள படைப்பாளர்கள், புத்தொழில் நிறுவனங்கள், தொழில்துறை தலைவர்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்களை ஒன்றிணைப்பதன் மூலம் ஊடகம், பொழுதுபோக்கு, மின்னணு கண்டுபிடிப்புகளுக்கான உலகளாவிய மையமாக இந்தியாவை நிலைநிறுத்த தயாராக உள்ளது.
0 Comments