Recent Post

6/recent/ticker-posts

ஏப்ரல் 2025 மாதத்திற்கான கிராமப்புற, நகர்ப்புற மற்றும் ஒருங்கிணைந்த நுகர்வோர் விலை குறியீட்டு எண் / Rural, Urban and Combined Consumer Price Index for the month of April 2025

ஏப்ரல் 2025 மாதத்திற்கான கிராமப்புற, நகர்ப்புற மற்றும் ஒருங்கிணைந்த நுகர்வோர் விலை குறியீட்டு எண் / Rural, Urban and Combined Consumer Price Index for the month of April 2025

2024 ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடும் போது, 2025 ஏப்ரல் மாத பணவீக்க விகிதம் ஆண்டுக்கு ஆண்டு என்ற முறையில் அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டின் அடிப்படையில் 3.16% ஆக உள்ளது.

2025 மார்ச் மாதத்துடன் ஒப்பிடும்போது 2025 ஏப்ரல் மாதத்தில் பணவீக்கம் 18 அடிப்படை புள்ளிகள் குறைந்துள்ளது. 2019 ஜூலை மாதத்திற்கு பிறகு இது மிகக் குறைந்த பணவீக்க விகிதமாகும்.

2024 ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடும்போது, 2025 ஏப்ரல் மாதத்திற்கான உணவு பணவீக்க விகிதம் 1.78%-ஆக இருந்தது. 2025 மார்ச் மாதத்துடன் ஒப்பிடும்போது 2025 ஏப்ரல் மாதத்தில் உணவுப் பணவீக்க விகிதம் 91 அடிப்படைப் புள்ளிகள் சரிவுடன் காணப்படுகிறது.

2025 ஏப்ரலில் பணவீக்கம் மற்றும் உணவுப் பணவீக்கத்தில் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க சரிவுக்கு காய்கறிகள், பருப்பு வகைகள், பொருட்கள், பழங்கள், இறைச்சி, மீன், தானியங்கள் மற்றும் தயாரிப்புகளின் பணவீக்கம் குறைந்ததே முக்கியக் காரணமாகும்.

2025 ஏப்ரல் மாதம் கிராமப்புற உணவுப் பணவீக்கத்தில் குறிப்பிடத்தக்க சரிவு காணப்பட்டது. 2025 மார்ச் மாதத்தில் 2.82% ஆக இருந்த கிராமப்புற உணவுப் பணவீக்கம் 2025 ஏப்ரல்-இல் 1.85% ஆகக் காணப்படுகிறது.

2025 மார்ச் இல் நகர்ப்புற பணவீக்கம் 3.43%-லிருந்த நிலையில், 2025 ஏப்ரலில் அது 3.36%-ஆக குறைந்து காணப்பட்டது. உணவுப் பணவீக்கம் 2025 மார்ச் மாதத்தில் 2.48%-லிருந்து 2025 ஏப்ரலில் 1.64% ஆக குறைந்துள்ளது.

2025 ஏப்ரல் மாதத்தில் வீட்டுவசதி பணவீக்க விகிதம் 3.00% ஆக இருந்தது. இது 2025 மார்ச் மாதத்தில் விகிதம் 3.03% ஆக இருந்தது. 2025 ஏப்ரல் மாதத்திற்கான நகர்ப்புற மற்றும் கிராமப்புற கல்வி பணவீக்க விகிதம் 4.13%-மாகும். இது 2025 மார்ச் மாதத்தில் 3.98%-ஆக இருந்தது.

2025 ஏப்ரல் மாதத்திற்கான கிராமப்புற மற்றும் நகர்ப்புற சுகாதார பணவீக்க விகிதம் 4.25%-ஆகும். இது 2025 மார்ச் மாதத்தில் 4.26%-ஆக இருந்தது. 2025 ஏப்ரல் மாதத்திற்கான கிராமப்புற மற்றும் நகர்ப்புற போக்குவரத்து மற்றும் தொடர்பு பணவீக்க விகிதம் 3.73%-ஆகும். இது 2025 மார்ச் மாதத்தில் விகிதம் 3.36%-ஆக இருந்தது.

2025 ஏப்ரல் மாதத்திற்கான கிராமப்புற மற்றும் நகர்ப்புற எரிபொருள் மற்றும் மின் கட்டண பணவீக்க விகிதம் 2.92%-ஆகும். இது 2025 மார்ச் மாதத்தில் 1.42%-மாக இருந்தது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel