அகில இந்திய மொத்த விலை குறியீட்டு எண்ணை அடிப்படையாகக் கொண்ட ஆண்டுப் பணவீக்க விகிதம் 2025 - ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கான (2024 -ம் ஆண்டு ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடும்போது) 0.85%-மாக (தற்காலிகம்) உள்ளது.
2025 - ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் பணவீக்க விகிதம் நேர்மறையாக உள்ளது. இந்தப் பணவீக்க விகிதம் முதன்மையாக உணவுப் பொருட்கள், பிற பொருட்களின் உற்பத்தி, ரசாயனங்கள் மற்றும் ரசாயனப் பொருட்கள், பிற போக்குவரத்து உபகரணங்கள், இயந்திரங்கள், உபகரணங்கள் உற்பத்தி போன்றவற்றின் விலைகளில் ஏற்பட்ட அதிகரிப்பு காரணமாக ஏற்பட்டுள்ளது.
2025 - ம் ஆண்டு மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில், 2025 - ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கான மொத்த விலைக் குறியீட்டு எண்ணில் மாதந்தோறும் ஏற்பட்ட மாற்றம் (-) 0.19% -ஆக இருந்தது.
முதன்மை பொருட்கள் (எடை 22.62%)
இந்த முக்கிய பொருட்கள் அடங்கிய குழுவின் குறியீடு 2025 - ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 0.11% குறைந்து 184.4 - ஆக (தற்காலிகம்) இருந்தது. இது 2025 - ம் ஆண்டு மார்ச் மாதத்தில் 184.6 - ஆக (தற்காலிக) இருந்தது.
கச்சா பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு (-5.31%) மற்றும் உணவு அல்லாத பொருட்களின் விலை (-1.78%) 2025 - ம் ஆண்டு மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில் 2025 - ம் ஆண்டில் ஏப்ரல், மாதத்தில் குறைந்துள்ளது.
கனிமங்கள் (7.81%) மற்றும் உணவுப் பொருட்களின் விலை (0.36%) 2025 - ம் ஆண்டு மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில் 2025 - ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் அதிகரித்துள்ளது.
எரிபொருள் மற்றும் மின்சாரம் (எடை 13.15%)
இந்த முக்கிய பொருட்களுக்கான குழுவின் மொத்த விலைக் குறியீடு2025 - ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 152.4 என்ற புள்ளியிலிருந்து 2.82% குறைந்து 148.1 புள்ளியாக (தற்காலிகம்) இருந்தது.
2025ம் ஆண்டு மார்ச் மாதத்திற்கான (தற்காலிகம்). 2025 - ம் ஆண்டு மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில் 2025 - ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் கனிம எண்ணெய் பொருட்கள் (-3.95%) - மாகவும், மின்சார த்தின் (-1.38%) விலை குறைந்துள்ளது. 2025 - ம் ஆண்டு மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில் 2025 - ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் நிலக்கரியின் விலை (0.22%) அதிகரித்துள்ளது.
உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் (எடை 64.23%)
இந்த முக்கிய பொருட்களின் குழுக் குறியீடு 2025 - ம் ஆண்டு மார்ச் மாதத்திற்கான 144.4 (தற்காலிகம்) என்ற புள்ளியிலிருந்து 2025 - ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 0.35% அதிகரித்து 144.9 (தற்காலிகம்) புள்ளியாக இருந்தது.
உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களுக்கான 22 தேசிய தரவு மையத்தின் இரண்டு இலக்க குழுக்களில், 16 குழுக்கள் விலை உயர்வைக் கண்டுள்ளன. 5 குழுக்கள் விலை குறைவைக் கண்டுள்ளன. 1 குழுவின் விலையில் எந்த மாற்றத்தையும் இல்லை.
மாதந்தோறும் விலை அதிகரிப்பு ஏற்பட்டுள்ள சில முக்கியமான பொருட்களின் குழுக்கள் அடிப்படை உலோகங்களின் உற்பத்தி; ரசாயனங்கள் மற்றும் ரசாயன பொருட்கள்; இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள் தவிர, புனையப்பட்ட உலோகப் பொருட்கள்; இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள் மற்றும் பிற பொருட்களின் உற்பத்தி போன்றவை இதில் அடங்கும்.
விலைகள் குறைந்துள்ள சில குழுக்களில் ஜவுளி உற்பத்தி; மருந்துகள், மருத்துவ இரசாயன மற்றும் தாவரவியல் பொருட்கள்; காகிதம் மற்றும் காகிதப் பொருட்கள்; ஆயத்த ஆடை, அச்சிடுதல் மற்றும் பதிவு செய்யப்பட்ட ஊடகங்களின் மறுஉருவாக்கம் போன்றவை 2025 - ம் ஆண்டு மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில் 2025 - ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கான விலை விகிதமும் இதில் அடங்கும்.
0 Comments