ஊரக மக்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், வேலைவாய்ப்பை உருவாக்கவும் நோக்கமாகக் கொண்ட மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், ஒரு குடும்பத்துக்கு ஆண்டுக்கு குறைந்தபட்சம் 100 நாட்கள் ஊதியத்துடன் கூடிய வேலை வழங்குவதை உறுதி செய்கிறது.
ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் தனிப்பட்ட வேலை உறுதி அட்டை வழங்கப்படும். இதன் மூலம் கிராமப்புறங்களில் நிலையான வருமான வாய்ப்புகள் உருவாகும்.
இந்நிலையில், தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய ரூ.4,034 கோடி நிதியை மத்திய அரசு தாமதமாக்கியது. தற்போது, அந்த நிலுவைத் தொகையிலிருந்து ரூ.2,999 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது.
0 Comments