Recent Post

6/recent/ticker-posts

நீதித்துறையில் சேர குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் வழக்கறிஞராக பயிற்சி பெற்றிருக்க வேண்டும் - உச்ச நீதிமன்றம் உத்தரவு / To join the judiciary, one must have practiced as a lawyer for at least 3 years - Supreme Court orders

நீதித்துறை பணியில் சேர குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் வழக்கறிஞராகப் பயிற்சி பெற்றிருக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய், நீதிபதி அகஸ்டின் ஜார்ஜ் மசிஹ், நீதிபதி வினோத் சந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்த தீர்ப்பின்படி, சிவில் நீதிபதிகள் தேர்வுக்கு ஆஜராவதற்கு, குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் வழக்கறிஞராக பணியாற்றியிருக்க வேண்டும். இருப்பினும், இந்த தீர்ப்பு தற்போது தொடங்கி தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் நீதித்துறை பணியமர்த்தலுக்கு பொருந்தாது.

அதன்படி, உயர் நீதிமன்றங்கள் ஏற்கனவே ஜூனியர் பிரிவு சிவில் நீதிபதிகள் நியமன நடைமுறையைத் தொடங்கியுள்ளதால், தற்போதைய நியமனத்துக்கு உச்ச நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பின் அடிப்படையில் குறைந்தபட்ச நடைமுறைத் தேவை பொருந்தாது.

அதேவேளையில், அடுத்த முறை தொடங்கப்படும் நியமன நடைமுறையில் இருந்து இந்த தீர்ப்பு பொருந்தும் என்று நீதிபதிகள் தெளிவுப்படுத்தினர்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel