வடிவமைத்து- கட்டுமானம் செய்து- நிதிவழங்கி- இயக்கி- மாற்றுதல் செய்யும் நடைமுறையுடன் ஆந்திரப்பிரதேசத்தில் பாட்வெல்-நெல்லூர் இடையே ரூ.3653.10 கோடி செலவில் 108.134 கி.மீ. தூரம் நான்கு வழிச்சாலை அமைக்க பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
விசாகப்பட்டினம் – சென்னை தொழில்வழித்தடம், ஐதராபாத்-பெங்களூரு தொழில்வழித்தடம், சென்னை-பெங்களூரு தொழில்வழித்தடம் ஆகிய 3 முக்கியமான வழித்தடங்களுக்கு இணைப்பை ஏற்படுத்துவதாக பாட்வெல்-நெல்லூர் வழித்தடம் இருக்கும். இது நாட்டின் சரக்குப்போக்குவரத்து செயல்பாட்டு குறியீட்டில் ஆக்கபூர்வமான தாக்கத்தை ஏற்படுத்தும்.
இந்த திட்டத்தின் மூலம் 20 லட்சம் மனித நாட்கள் நேரடி வேலைவாய்ப்பையும், 23 லட்சம் மனித நாட்கள் மறைமுக வேலைவாய்ப்பையும் உருவாக்கும். இந்த வழித்தடத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பொருளாதார நடவடிக்கைகள் அதிகரிப்பதன் காரணமாக கூடுதல் வேலைவாய்ப்புகளும் உருவாகும்.
0 Comments