உத்தரப் பிரதேசத்தின் கான்பூரில் இன்று ரூ.47,600 கோடி மதிப்புள்ள பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமர் திரு நரேந்திர மோடி புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
கான்பூர் மெட்ரோ ரயில் திட்டத்தின் ஒரு பகுதியாக ரூ.2,120 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான சன்னிகஞ்ச் மெட்ரோ நிலையம் முதல் கான்பூர் மத்திய மெட்ரோ நிலையம் வரையிலான மெட்ரோ ரயில் பணிகளை அவர் தொடங்கி வைத்தார்.
யமுனா எக்ஸ்பிரஸ்வே தொழில்துறை மேம்பாட்டு ஆணையத்தில் தொகுதி 28 -ல் 220 கிலோவாட் துணை மின்நிலையத்திற்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்.
பெருநகர நொய்டாவில் உள்ள ஈக்கோடெக் - 8 மற்றும்ஈக்கோடெக் -10 - ல் ரூ.320 கோடிக்கும் கூடுதல் மதிப்பிலான 132 கிலோவாட் துணை மின்நிலையங்களையும் அவர் திறந்து வைத்தார்.
உத்தரபிரதேச மாநிலத்தின் எரிசக்தி திறனை மேம்படுத்தும் வகையில் கான்பூரில் ரூ.8,300 கோடிக்கும் கூடுதல் மதிப்புள்ள 660 மெகாவாட் பங்கி அனல் மின் விரிவாக்கத் திட்டத்தை பிரதமர் தொடங்கி வைத்தார்.
0 Comments