பீகாரின் காராகட்டில் இன்று ரூ.48,520 கோடி மதிப்புள்ள பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்த பிரதமர் திரு நரேந்திர மோடி புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
ஔரங்காபாத் மாவட்டத்தில் ரூ.29,930 கோடிக்கும் கூடுதல் மதிப்பிலான நபிநகர் சூப்பர் அனல் மின் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகளுக்கு (3x800 மெகாவாட்) பிரதமர் அடிக்கல் நாட்டினார்.
தேசிய நெடுஞ்சாலை - 22 - ல் சுமார் ரூ.5,520 கோடி மதிப்பிலான பாட்னா - கயா - தோபி பிரிவின் நான்கு வழிச் சாலையையும், தேசிய நெடுஞ்சாலை - 27 - ல் உள்ள கோபால்கஞ்ச் நகரில் உயர்மட்ட நெடுஞ்சாலையின் நான்கு வழித்தடங்களையும், தரம் உயர்த்தப்பட்ட சாலைகளையும் அவர் திறந்து வைத்தார்.
0 Comments