கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே சுமார் 8 ஆயிரம் ஆண்டுகள் பழைமையான நுண் கற்கால மக்கள் பயன்படுத்திய கற்கருவிகள் கண்டெடுக்கப்பட்டன.
உளுந்தாம்பட்டு தென்பெண்ணை ஆற்றில் தற்போது கண்டறியப்பட்ட நுண்கற்கால கருவியின் உயரம் 2.5 செ.மீ, நீளம் 2 செ.மீ இவை விலங்கின் தோலை அறுப்பதற்காக பயன்படுத்தப்பட்ட பிளேடு வகை, இதன் காலம் சுமார் 8 ஆயிரம் ஆண்டுகள் பழைமையானவை.
கடலூர் மாவட்டம் ஒடப்பன்குப்பம் பகுதியில் கண்டெடுக்கப்பட்டது போலவே இந்த பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. மேலும், முந்தைய கண்டுபிடிப்புகளுக்கு வலுசேர்க்கும் வகையில் தற்போது கண்டுபிடித்த நுண் கற்காலக் கருவி ஆதாரமாக உள்ளது.
0 Comments