அமெரிக்காவின் வரி விதிப்புகளுக்கு பதிலடியாக சீனா மட்டுமே அந்த நாட்டுப் பொருள்களுக்கு கூடுதல் இறக்குமதி விதித்தது. இதன் காரணமாக, உலகின் மிகப் பெரிய பொருளாதார சக்திகளான அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே வா்த்தகப் போா் தீவிரமடைந்தது.
இந்தச் சூழலில், பதற்றத்தைத் தணிப்பதற்காக இரு நாடுகளும் ஸ்விட்சா்லாந்தின் ஜெனீவாவில் கடந்த சனிக்கிழமை முதல் பேச்சுவாா்த்தை நடத்திவந்தன. அதன் பலனாக தற்போது கூடுதல் வரி விதிப்புகளை 90 நாள்களுக்கு நிறுத்திவைக்க இரு நாடுகளும் தற்போது ஒப்புக்கொண்டுள்ளன.
இந்தப் பேச்சுவாா்த்தை தொடங்குவதற்கு முன்னரே, சீன பொருள்கள் மீது தற்போது விதிக்கப்பட்டுள்ள 145 சதவீதமாக கூடுதல் வரி விதிப்பை 80 சதவீதமாகக் குறைப்பது குறித்து பரிசீலிப்பதாக டிரம்ப் அறிவித்தது நினைவுகூரத்தக்கது.
0 Comments