மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணைய (யுபிஎஸ்சி) தலைவராக இருந்த ப்ரீத்தி சுதன் பதவிக்காலம் ஏப்ரல் 29 ஆம் தேதியுடன் முடிந்த நிலையில், யுபிஎஸ்சி தலைவர் பதவி காலியாக இருந்தது.
இந்த நிலையில், மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணைய (யுபிஎஸ்சி) தலைவராக, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் அஜய் குமார் நியமிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு பணியாளர் அமைச்சகம் பிறப்பித்துள்ள உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, இந்திய அரசியலமைப்பின் பிரிவு 316(1) இன் கீழ் அஜய் குமாரை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணைய (யுபிஎஸ்சி) தலைவர் நியமனத்திற்கு ஒப்புதல் அளித்தார்.
0 Comments