மத்திய / மாநில அரசுகளின் அனல்மின் திட்டங்கள், தனியார் மின் உற்பத்தி நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு புதிதாக நிலக்கரி இணைப்புகளை வழங்க பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
மத்திய/மாநில அரசுகளின் மின் உற்பத்தி நிறுவனங்களுக்கு அறிவிக்கப்பட்ட விலையில் நிலக்கரி இணைப்பு, அறிவிக்கப்பட்ட விலைக்கு அதிகமாக பிரீமியம் அடிப்படையில் அனைத்து மின் உற்பத்தி நிறுவனங்களுக்கும் நிலக்கரி இணைப்பு என இரு வழிகள் திருத்தப்பட்ட ஷக்தி கொள்கையின் கீழ் முன்மொழியப்பட்டுள்ளன.
இந்த முடிவுகளை நடைமுறைப்படுத்த இந்திய நிலக்கரி நிறுவனம், சிங்கரேணி நிலக்கரி நிறுவனம் ஆகியவற்றுக்கு வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன.
சம்மந்தப்பட்ட துறைகள், நிறுவனங்கள், ஒழுங்குமுறை ஆணையங்கள் ஆகியவற்றுக்கு திருத்தப்பட்ட ஷக்தி கொள்கையை பரவலாகக் கொண்டு செல்லும் வகையில் சம்மந்தப்பட்ட அமைச்சகங்கள் மற்றும் அனைத்து மாநிலங்களுக்கும் இது பற்றி எடுத்துரைக்கப்படும்.
திருத்தியமைக்கப்பட்ட கொள்கை காரணமாக நிலக்கரி நிறுவனங்களுக்கு கூடுதல் செலவு எதுவும் இருக்காது. இந்தக் கொள்கையின் மூலம் அனல்மின் நிலையங்கள், ரயில்வே, இந்திய நிலக்கரி நிறுவனம், சிங்கரேணி நிலக்கரி நிறுவனம், இறுதி பயன்பாட்டாளர்கள் மாநில அரசுகள் பயனடையும்.
0 Comments