நமது நாட்டில் உள்ள முக்கியமான புலனாய்வு அமைப்புகளில் ஒன்று சிபிஐ. நாட்டின் பல முக்கிய வழக்குகளை சிபிஐ வெற்றிகரமாக விசாரித்துள்ளன. சிக்கலான வழக்குகளிலும் கூட குற்றவாளிகளை சிபிஐ சரியாக அடையாளம் கண்டு நடவடிக்கை எடுக்கும்.
இந்த சிபிஐ அமைப்பின் இயக்குநராக பிரவீன் சூட் இருந்தார். கடந்த 2023ம் ஆண்டு மே மாதம் பதவியேற்ற இவரது பதவிக்காலம் இரண்டு ஆண்டுகள் இருந்தது.
அதன்படி அவரது பதவிக்காலம் இந்த மாதத்துடன் நிறைவடைய இருந்த நிலையில், அதை ஓராண்டு நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
கடந்த திங்கள்கிழமை புதிய சிபிஐ இயக்குநரை நியமிப்பது தொடர்பாகப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதில் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா மற்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில் தான் பிரவீன் சூட் பதவிக்காலத்தை மேலும் ஓராண்டு நீடிப்பது குறித்து முடிவெடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
0 Comments