Recent Post

6/recent/ticker-posts

ராணுவத் தளபதிக்கு கூடுதல் அதிகாரம் அளித்தது மத்திய அரசு / The central government has given additional powers to the Army Chief

ராணுவத் தளபதிக்கு கூடுதல் அதிகாரம் அளித்தது மத்திய அரசு / The central government has given additional powers to the Army Chief

இந்தியா - பாகிஸ்தான் ராணுவத்தினர் நேற்று இரவு முதல் எல்லையோரப் பகுதிகளில் கடுமையான தாக்குதலில் ஈடுபட்டு வருவதால் இரு நாடுகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.

இந்திய எல்லைப் பகுதி நகரங்களை குறிவைத்து பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்திய நிலையில் முப்படைத் தளபதிகளையும் இன்று சந்தித்து பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை நடத்தினார்.

இந்த நிலையில், ராணுவத் தளபதி உபேந்திர துவிவேதிக்கு கூடுதல் அதிகாரம் அளித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ”1948 ராணுவ விதி 33-இன் கீழ் ராணுவத் தளபதிக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்படுகிறது. 

அனைத்து பிராந்தியங்களிலும் உள்ள 32 படைகளில் 14 படைகளின் வீரர்களை எல்லைக்கு மாற்றுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ராணுவத்துக்கு பணியாளர்கள் சேர்க்கவும், நிதி ஒதுக்கீட்டுக்கான அதிகாரமும் பிப். 9, 2028 வரை 3 ஆண்டுகளுக்கு அளிக்கப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel