பேராசிரியர் தி. இராசகோபாலன் எழுதிய "கலைஞரின் பேனா” நூலினை புதன்கிழமை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த நூலாசிரியர் பேராசிரியர் இராசகோபலன், முரசொலி செல்வத்தின் வகுப்புத் தோழர், திராவிடர் மாணவ முன்னேற்றக் கழகத்தில் இணைந்து பணியாற்றியவர்.
இந்த நிகழ்ச்சியில், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர் பாபு, நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். ஜெகத்ரட்சகன், சட்டப்பேரவை உறுப்பினர் அன்னியூர் சிவா, இந்து சமய அறநிலையத் துறை ஆலோசனைக் குழு உறுப்பினர் சுகி சிவம், கற்பகம் புத்தகாலயத்தின் நல்லதம்பி ஆகியோர் கலந்து கொண்டனர்.
0 Comments