திருச்சி பஞ்சப்பூரில் ரூ. 408 கோடியில் பல்வேறு வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த பேருந்து முனையத்தை மக்கள் பயன்பாட்டுக்காகத் திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்.
திருச்சி பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பேருந்து முனையம், கனரக சரக்கு வாகனம் முனையம் திறப்பு விழா இன்று நடைபெற்றது. விழாவில் நவீன வசதிகளுடன் கூடிய புதிய காய்கறி அங்காடிக்கும் முதல்வர் அடிக்கல் நாட்டி வைத்தார்.
திருச்சி மாவட்டத்தில் இன்று ரூ.2,343.90 கோடியில் பல்வேறு நலத்திட்டங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்.
பஞ்சப்பூரில் அமைக்கப்பட்டுள்ள முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி ஒருங்கிணைந்த பேருந்து முனையத்தை முதல்வர் திறந்து வைத்து உரையாற்றினார் ஸ்டாலின். திருச்சியில் இன்று பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் முதல்வர் வழங்கினார்.
மின் தூக்கி, நகரும் படிகட்டு, ஏசி அறைகள் என பல்வேறு வசதிகளுடன் பஞ்சப்பூர் பேருந்து முனையம் ரூ.408.36 கோடி செலவில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
0 Comments