Recent Post

6/recent/ticker-posts

ட்ரோன் அடிப்படையிலான அமைப்புகளுக்கு ஏற்ற குவாண்டம் விசை விநியோக தொழில்நுட்பத்தை கூட்டாக உருவாக்குவதற்கான சி-டாட் மற்றும் சினெர்ஜி குவாண்டம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் / MoU between C-Dot and Synergy Quantum to jointly develop quantum key distribution technology suitable for drone-based systems

ட்ரோன் அடிப்படையிலான அமைப்புகளுக்கு ஏற்ற குவாண்டம் விசை விநியோக தொழில்நுட்பத்தை கூட்டாக உருவாக்குவதற்கான சி-டாட் மற்றும் சினெர்ஜி குவாண்டம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் / MoU between C-Dot and Synergy Quantum to jointly develop quantum key distribution technology suitable for drone-based systems

குவாண்டம் தொழில்நுட்ப அடிப்படையில் பாதுகாப்பான தகவல் தொடர்பு சாதனங்களில் இந்தியாவின் திறன்களை மேம்படுத்துவதற்கான ஒரு எதிர்கால முயற்சியாக, மத்திய தொலைத்தொடர்புத் துறையின் (DoT) கீழ் உள்ள முதன்மைத் தொலைத்தொடர்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமான டெலிமேடிக்ஸ் மேம்பாட்டு மையம் (சி-டாட்) நிறுவனமும், குவாண்டம் தொழில்நுட்பத் துறையில் ஈடுபட்டுள்ள அதிநவீன தொழில்நுட்ப நிறுவனமான சினெர்ஜி குவாண்டம் இந்தியா என்ற தனியார் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளன.

தொழில்நுட்பத் தயார்நிலை 6 அல்லது அதற்கு மேற்பட்ட நிலையில், துருவமுனைப்பு குறியாக்கத்துடன் டிகோய் அடிப்படையிலான பிபி84 நெறிமுறையைப் பயன்படுத்தி, ட்ரோன் அடிப்படையிலான குவாண்டம் விசை விநியோக அமைப்புகளின் மேம்பாட்டில் சி - டாட் நிறுவனம் மற்றும் சினெர்ஜி குவாண்டம் நிறுவனம் இடையேயான ஒத்துழைப்பை முறைப்படுத்துவதே இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் நோக்கமாகும்.

"தற்சார்பு இந்தியா" முன்முயற்சியின் கீழ் உள்நாட்டு ஆராய்ச்சி மற்றும் புதுமைக் கண்டுபிடிப்புகளுக்கு வலு சேர்க்கும் வகையிலும், வளர்ந்து வரும் பாதுகாப்பான தொலைத்தொடர்புத் தொழில்நுட்பங்களில் இந்தியாவின் திறன்களை மேம்படுத்தும் நோக்கிலும் தேசிய தொலைநோக்குப் பார்வையுடன் இணைந்து செயல்படுவதற்கு இந்த ஒப்பந்தம் வகை செய்கிறது.

இந்த கூட்டு முயற்சியின் ஒரு பகுதியாக, சி-டாட் மற்றும் சினர்ஜி குவாண்டம் ஆகிய நிறுவனங்கள் இணைந்து ட்ரோன் அடிப்படையிலான பயன்பாட்டிற்கு உகந்த குவாண்டம் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களின் மேம்பாட்டு நடவடிக்கைகளில் கவனம் செலுத்தும்.

தேசிய, சர்வதேச அளவில் பெரிய ஆராய்ச்சித் திட்டங்களை இணைந்து உருவாக்குதல், அறிவுசார் ஆய்வுக் கட்டுரைகளின் வெளியீடுகள், வெள்ளை அறிக்கைகள் மற்றும் பிற தளங்கள் வாயிலாக ஆராய்ச்சித் திட்டங்களை செயல்படுத்துவதும் இந்தக் கூட்டு நடவடிக்கைகளில் அடங்கும்.

இந்த இரு நிறுவனங்களைச் சேர்ந்த முக்கிய பிரதிநிதிகள், துறை சார்ந்த நிபுணர்களும் சந்தித்து பேச்சுவார்த்தைகள், குறுகிய கால பாடத்திட்டங்களை வழங்குதல் மற்றும் குறித்த நேரத்தில் ஆராய்ச்சி கருப்பொருள்கள் தொடர்பான கருத்தரங்குகள், மாநாடுகள், ஆலோசனைக் கூட்டங்களை ஏற்பாடு செய்வதிலும் ஈடுபடவுள்ளது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel