அந்த நேரம் உச்ச நீதிமன்றம் தெரிவிக்கையில், ''மாவட்ட நீதிபதியாக இருந்தோ அல்லது வழக்கறிஞர்களாக இருந்தோ உயர்நீதிமன்ற நீதிபதியாக பணியமர்த்தப்பட்டாலும், ஓய்வுபெற்ற அனைத்து உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கும் ''ஒரு பதவி ஒரு ஓய்வூதியம்'' என்ற கொள்கை பொருந்தும்'' என்று தெரிவித்தது.
மேலும், ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வூதியம் குறித்து உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகள்,"உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஓய்வு பெற்றால் ஆண்டுக்கு ரூ.15 லட்சம் ஓய்வூதியம் தர வேண்டும்.
உயர்நீதிமன்ற நீதிபதிகள், கூடுதல் நீதிபதிகள் ஓய்வு பெற்றால் ஆண்டுக்கு ரூ.13.6 லட்சம் ஓய்வூதியம் தர வேண்டும்.உயர் நீதிமன்ற நீதிபதி பதவியில் இருக்கும்போதே இறந்தால், அவர் நிரந்தரமாகப் பணியாற்றினாலும் அல்லது கூடுதல் பொறுப்பில் இருந்தாலும், அவரது மனைவி அல்லது சட்டப்பூர்வ வாரிசுகளுக்கு மத்திய அரசு குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும்" என்று அறிவித்துள்ளது.
0 Comments