மத்திய அரசின் முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகரான கே.வி.சுப்பிரமணியன், ஐஎம்எஃப்பில் இந்தியா, இலங்கை, பூடான், வங்கதேசம் ஆகிய நாடுகள் அடங்கிய குழு சாா்பில் செயல் இயக்குநராக இருந்தாா்.
அவரின் பதவிக்காலம் நிறைவடைய 6 மாதங்கள் உள்ள நிலையில், அந்தப் பதிவியில் இருந்து அவரை நீக்கி மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டது. அவரின் பதவி நீக்கத்துக்கான காரணம் அதிகாரபூா்வமாக அறிவிக்கப்படவில்லை.
இந்நிலையில், உலக வங்கியின் செயல் இயக்குநராக உள்ள பரமேஸ்வரன் ஐயருக்கு, ஐஎம்எஃப் வாரியத்தில் இந்தியாவின் நியமன இயக்குநராக தற்காலிக பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
0 Comments