இந்தியாவில் நகர எரிவாயு விநியோகக் கட்டமைப்பை விரிவுபடுத்துவதற்கான ஒரு குறிப்பிடத்தக்க படியாக, பிரதமர் திரு நரேந்திர மோடி மேற்கு வங்காளத்தின் அலிப்பூர்துவாரில் நகர எரிவாயு விநியோகத் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார்.
ரூ.1010 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள நகர எரிவாயு விநியோக திட்டம், அரசால் நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச வேலைத் திட்ட இலக்குகளுக்கு ஏற்ப சுமார் 19 சிஎன்ஜி நிலையங்களை நிறுவுவதன் மூலம், 2.5 லட்சத்திற்கும் மேற்பட்ட வீடுகள், 100-க்கும் மேற்பட்ட வணிக நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு குழாய் மூலம் இயற்கை எரிவாயு வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
0 Comments