ரோமானியாவின் புகாரெஸ்ட் நகரில் சூப்பர்பெட் செஸ் கிளாசிக் போட்டிகள் நடந்து வந்தன. இப்போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட பிரக்ஞானந்தா 9 சுற்றுகள் முடிவில், 5.5 புள்ளிகள் பெற்றார்.
அவரைப் போல், பிரான்ஸ் கிராண்ட் மாஸ்டரும் பிளிட்ஸ் செஸ் முன்னாள் உலக சாம்பியனுமான மேக்சிமா வஸியெர் லக்ரேவ், ஈரான் கிராண்ட் மாஸ்டர் அலிரெஸா ஃபிரோஸ்ஜா ஆகியோரும் 5.5 புள்ளிகள் பெற்றதால்,
யாருக்கு முதலிடம் என்பதை தீர்மானிக்க டைபிரேக்கர் போட்டிகள் நடத்தப்பட்டன. பிரக்ஞானந்தா - ஃபிரோஸ்ஜா இடையே நடந்த போட்டி டிரா ஆனது.
அதைத் தொடர்ந்து, ஃபிரோஸ்ஜா - மேக்சிமா இடையே நடந்த போட்டியும் டிரா ஆனது. அதையடுத்து, மேக்சிமாவுடன் நடந்த போட்டியில் பிரக்ஞானந்தா அபார வெற்றி பெற்றதால் அவர் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். இப்போட்டிகளில் உலக செஸ் சாம்பியன் குகேஷ் 4 புள்ளிகள் மட்டுமே பெற்று 9ம் இடம் பிடித்தார்.
0 Comments