Recent Post

6/recent/ticker-posts

SANSAD RATNA AWARDS 2025 / சன்சத் ரத்னா விருது 2025

SANSAD RATNA AWARDS 2025
சன்சத் ரத்னா விருது 2025

SANSAD RATNA AWARDS 2025 / சன்சத் ரத்னா விருது 2025

TAMIL

SANSAD RATNA AWARDS 2025 / சன்சத் ரத்னா விருது 2025: நாடாளுமன்றத்தில் சிறந்த பங்களிப்பு அளித்தவர்களைச் சிறப்பிக்கும்வகையில், அவர்களுக்கு பிரைம் பாயிண்ட் அறக்கட்டளையால் சன்சத் ரத்னா விருது வழங்கப்படுகிறது.

இந்த நிலையில், சிறந்த பங்காற்றியவர்களை பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான தேசிய ஆணையத்தின் (NCBC) தலைவர் ஹன்ஸ்ராஜ் அஹிர் தலைமையிலான நடுவர் குழு அறிவித்துள்ளது.

நாடாளுமன்றத்தின் 16 மற்றும் 17-வது மக்களவையில் சிறந்த பங்காற்றியதற்காக பருத்ஹரி மஹ்தாப் (பிஜு ஜனதா தளம்), சுப்ரியா சுலே (தேசியவாத காங்கிரஸ் - சரத்பவார்), என்.கே.பிரேமச்சந்திரன் (சமூகப் புரட்சிக் கட்சி), ஸ்ரீரங் அப்பா பர்னே (சிவசேனை) ஆகியோர் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

ஸ்மிதா வாக் (பாஜக), அரவிந்த் சாவந்த் (சிவசேனை - உத்தவ் தாக்கரே), நரேஷ் கண்பத் மாஸ்கே (சிவசேனை), வர்ஷா கெய்க்வாட் (காங்கிரஸ்), மேதா குல்கர்னி (பாஜக), பிரவீன் படேல் (பாஜக), ரவி கிஷன் (பாஜக), நிஷிகாந்த் துபே (பாஜக), பித்யூத் பரன் மஹாதோ (பாஜக), பி.பி.சௌத்ரி (பாஜக), மதன் ராத்தோர் (பாஜக), சி.என்.அண்ணாதுரை (திமுக), திலீப் சைக்கியா (பாஜக) ஆகியோருக்கும் விருது வழங்கப்படவுள்ளது.

மேலும், இரு நிரந்தரக் குழுக்களான நிதி மற்றும் விவசாயத் துறைகளுக்கும் சிறந்த செயல்திறனுக்காக விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

ENGLISH

SANSAD RATNA AWARDS 2025: The Prime Point Foundation has announced the Sansad Ratna Award to honour those who have made outstanding contributions to Parliament. The award was announced by a jury headed by Hansraj Ahir, Chairman, National Commission for Backward Classes (NCBC).

Barudhari Mahtab (BJD), Supriya Sule (Nationalist Congress Party-Sharad Pawar), N.K. Premachandran (Social Revolutionary Party) and Srirang Appa Barneh (Shiv Sena) have been selected for the award for their outstanding contributions to the 16th and 17th Lok Sabhas of Parliament.

The awards will also be given to Smita Vagh (BJP), Arvind Sawant (Shiv Sena-Uddhav Thackeray), Naresh Kanpat Maske (Shiv Sena), Varsha Gaikwad (Congress), Medha Kulkarni (BJP), Praveen Patel (BJP), Ravi Kishan (BJP), Nishikant Dubey (BJP), Pithyud Baran Mahato (BJP), P.P. Chowdhury (BJP), Madan Rathore (BJP), C.N. Annadurai (DMK), Dilip Saikia (BJP).

In addition, awards have been announced for the best performance of the two standing committees, namely the Finance and Agriculture departments.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel