கேரளத்தில் வழக்கமாக ஜூன் 1 ஆம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கும் நிலையில் இந்தாண்டு 8 நாள்களுக்கு முன்னதாகவே இன்று(மே 24) பருவமழை தொடங்கியதாக வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது.
கடந்த 25 ஆண்டுகளில் 2009ல் மே 23 ஆம் தேதி பருவமழை தொடங்கியதே மிகவும் முன்கூட்டிய பருவமழை தொடக்கமாக இருந்தது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
கேரளத்தைத் தொடர்ந்து தமிழகம், கர்நாடகத்தில் ஓரிரு நாள்களில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்றே தமிழ்நாட்டின் சில பகுதிகளில் பருவமழை தொடங்கியுள்ளது.
0 Comments