கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.அஞ்சாரியா, கவுகாத்தி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி விஜய் பிஷ்னோய், மும்பை உயர் நீதிமன்ற நீதிபதி ஏ.எஸ்.சந்தூர்கர் ஆகியோரை உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க உச்ச நீதிமன்ற கொலீஜியம் திங்கள்கிழமை பரிந்துரைத்தது.
இந்த பரிந்துரையை ஏற்று மூவரையும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக குடியரசுத் தலைவர் நியமித்துள்ளார். முன்னாள் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா மற்றும் நீதிபதிகள் அபய் எஸ்.ஓகா மற்றும் ஹிருஷிகேஷ் ராய் ஆகியோர் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் 3 காலியிடங்கள் ஏற்பட்டன. தற்போது, காலியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன.
0 Comments