Recent Post

6/recent/ticker-posts

தமிழ்நாட்டில் பரமக்குடி – ராமநாதபுரம் இடையே ரூ.1853 கோடி மதிப்பிலான 4-வழி தேசிய நெடுஞ்சாலை (NH-87) அமைக்கும் பணிகளுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் / The Union Cabinet has approved the construction of a 4-lane National Highway (NH-87) between Paramakudi and Ramanathapuram in Tamil Nadu at a cost of Rs. 1853 crore

தமிழ்நாட்டில் பரமக்குடி – ராமநாதபுரம் இடையே 46.7 கி.மீ தொலைவிற்கு நான்கு வழிச்சாலை அமைக்கும் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்தத் திட்டம் ரூ.1,853 கோடி செலவில் கலப்பின ஆண்டுத்தொகை மாதிரியில் அமைக்கப்பட உள்ளது.

தற்போது, மதுரை, பரமக்குடி, ராமநாதபுரம், மண்டபம், ராமேஸ்வரம் மற்றும் தனுஷ்கோடி இடையிலான 2-வழி தேசிய நெடுஞ்சாலை எண் 87, அதனுடன் தொடர்புடைய மாநில நெடுஞ்சாலைகளை இணைக்கும் வகையில் இந்த நான்கு வழிச் சாலை அமைக்கப்பட உள்ளது.

போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருவதன் காரணமாக குறிப்பாக அதிக மக்கள் தொகை நடமாட்டம் கொண்ட பகுதிகள் மற்றும் வழித்தடங்களில் உள்ள முக்கிய நகரங்களில், போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், இந்தத் திட்டத்தின்கீழ் பரமக்குடி முதல் ராமநாதபுரம் வரையிலான தேசிய நெடுஞ்சாலை எண்-87 இனி 4-வழிச் சாலையாக மேம்படுத்தப்படும்.

இதன் மூலம் இந்த வழித்தடத்தில் போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தர தீர்வு காண முடியும். மேலும், நெடுஞ்சாலைகளில் பாதுகாப்பை உறுதி செய்வதுடன் பரமக்குடி, சத்திரக்குடி, அச்சுந்தன்வயல், ராமநாதபுரம் போன்ற விரைவான வளர்ச்சி கண்டு வரும் நகர்ப்புறங்களின் போக்குவரத்துத் தேவைகளைப் பூர்த்தி செய்யவும் உதவிடும்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel