இந்திய வரலாற்றில் தொடர்ச்சியாக நீண்ட காலம் பணியாற்றிய 2-வது பிரதமர் என்ற சாதனைக்குச் சொந்தக்காரர் ஆகியிருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி.
பிரதமர் நரேந்திர மோடி தனது பதவி காலத்தில் வெள்ளிக்கிழமையான ஜூலை 25 ஆம் தேதியுடன் 4,078 நாள்களை நிறைவு செய்துள்ளார். இதன் மூலம், முன்னாள் பிரதமரான மறைந்த இந்திரா காந்தியின் பதவிக்காலமான, தொடர்ச்சியாக 4,077 நாள்கள் நாட்டின் பிரதமராகப் பதவி வகித்திருந்த சாதனையை முறியடித்துள்ளார்.
1966 ஆம் ஆண்டு ஜனவரி 24 ஆம் தேதி முதல் 1977 ஆம் ஆண்டு மார்ச் 24 ஆம் தேதி வரை இந்திரா காந்தி தொடர்ச்சியாக பிரதமராகப் பதவி வகித்திருந்தார்.
இந்த மைல்கல் சாதனையுடன், பிரதமர் ஜவாஹர்லால் நேருவுக்குப் பிறகு இந்திய வரலாற்றில் தொடர்ச்சியாக நீண்ட காலம் பிரதமராகப் பணியாற்றிய 2-வது பிரதமர் என்ற சிறப்பையும் பெற்றுள்ளார்.
0 Comments