பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டத்தில் 2025-26-ம் ஆண்டு முதல் 2028-29-ம் ஆண்டு வரை நான்கு ஆண்டுகளுக்கு ரூ.2000 கோடி செலவில் "தேசிய கூட்டுறவு மேம்பாட்டுக் கழகத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்வதற்கான மத்திய அரசின் துறைசார்ந்த திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. (நிதியாண்டு 2025-26 முதல் ஆண்டுதோறும் ரூ.500 கோடி).
2025-26 நிதியாண்டு முதல் நிதியாண்டு 2028-29-ம் நிதியாண்டு வரை தேசிய கூட்டுறவு மேம்பாட்டுக்கு ரூ.2000 கோடி மானிய அடிப்படையில், வழங்கப்படும் இந்த நிதி ஒதுக்கீட்டின் மூலம் நான்கு ஆண்டுகளில் வெளிச்சந்தையிலிருந்து 20,000 கோடி ரூபாய் அளவிற்கு முதலீடு திரட்ட வகை செய்கிறது.
இந்த நிதியைக் கொண்டு கூட்டுறவு நிறுவனங்களுக்கு புதிய திட்டங்கள் / ஆலைகளை விரிவுபடுத்தும் பணிகள் மற்றும் செயல்பாட்டு மூலதனத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான கடனுதவிகளை வழங்கவும் பயன்படும்.
0 Comments