நாட்டில் 2025 ஜூன் மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் 6.2% உயர்ந்து ரூ.1.84 லட்சம் கோடி வசூலாகியுள்ளது. கடந்த ஆண்டு ஜூன் மாதத்தை ஒப்பிடுகையில் (ரூ.1.73 லட்சம் கோடி) தற்போது 6.2 சதவீத அதிக வருவாய் கிடைக்கப் பெற்றுள்ளது.
'கடந்த ஜூனில் உள்நாட்டு பரிவா்த்தனைகளில் இருந்து ரூ.1.38 லட்சம் கோடியும், இறக்குமதியில் இருந்து ரூ.45,690 கோடியும் கிடைக்கப் பெற்றுள்ளது. இவை முறையே 4.6 சதவீதம், 11.4 சதவீத அதிகரிப்பாகும்.
ஒன்றிய ஜிஎஸ்டி ரூ.34,558 கோடி, மாநில ஜிஎஸ்டி ரூ.43,268 கோடி, ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி ரூ.93,280 கோடி, கூடுதல் வரி ரூ.13,491 கோடியாகும். திருப்பியளிக்கப்பட்ட மொத்த தொகை ரூ.25,491 கோடி.
தமிழகம், மகாராஷ்டிரம், மேற்கு வங்கம், கா்நாடகம், ராஜஸ்தான் போன்ற பெரிய மாநிலங்கள் 4 முதல் 8 சதவீத அதிகரிப்பை பதிவு செய்துள்ளன. அதேநேரம், உத்தர பிரதேசம், பஞ்சாப், குஜராத் போன்ற மாநிலங்களில் 1 முதல் 4 சதவீத அதிகரிப்பே காணப்படுகிறது.
0 Comments