பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், நாட்டின் விளையாட்டு சூழலை மறுவடிவமைத்து, விளையாட்டு மூலம் குடிமக்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஒரு முக்கிய முயற்சியான தேசிய விளையாட்டுக் கொள்கை 2025-க்கு இன்று ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இந்தப் புதிய கொள்கை, தற்போதுள்ள தேசிய விளையாட்டுக் கொள்கை 2001-க்கு மாற்றாகவும் இந்தியாவை உலகளாவிய விளையாட்டு சக்தி மையமாகவும், 2036-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் உட்பட சர்வதேச விளையாட்டு நிகழ்வுகளில் சிறந்து விளங்குவதற்கான வலுவான போட்டியாளராகவும் நிலைநிறுத்துவதற்கான தொலைநோக்கு மற்றும் திட்டமிடலை இது அடிப்படையாகக் கொண்டுள்ளது.
தேசிய விளையாட்டுக் கொள்கை 2025 என்பது மத்திய அமைச்சகங்கள், நிதி ஆயோக், மாநில அரசுகள், தேசிய விளையாட்டு கூட்டமைப்புகள், விளையாட்டு வீரர்கள், கள நிபுணர்கள் மற்றும் பொது பங்குதாரர்கள் ஆகியோரின் விரிவான ஆலோசனைகளால் உருவாக்கப்பட்டதாகும்.
0 Comments