Recent Post

6/recent/ticker-posts

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மாநிலங்களவைக்கு 4 நியமன எம்.பி.க்களை நியமித்தார் / President Draupadi Murmu appoints 4 nominated MPs to the Rajya Sabha

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மாநிலங்களவைக்கு 4 நியமன எம்.பி.க்களை நியமித்தார் / President Draupadi Murmu appoints 4 nominated MPs to the Rajya Sabha

மாநிலங்களவையின் நியமன எம்.பி.க்களாக 4 பேரை நியமித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு சனிக்கிழமை உத்தரவிட்டுள்ளார்.

அதில், மூத்த வழக்கறிஞர் உஜ்வால் நிகம் (பாஜக) மூத்த வழக்கறிஞர், வெளியுறவுத்துறை முன்னாள் செயலர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா, முன்னாள் ஆசிரியர் சதானந்தன் மாஸ்டர் (பாஜக) மற்றும் வரலாற்று ஆய்வாளர் மீனாக்‌ஷி ஜெயின் ஆகியோர் நியமன எம்.பிக்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் 12 பேரை குடியரசுத் தலைவர் மாநிலங்களவைக்கு நியமிக்கிறார். மாநிலங்களவையில் மொத்தம் 245 உறுப்பினர்கள் உள்ளனர்.

இதில் 12 உறுப்பினர்கள் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார்கள். மீதமுள்ள உறுப்பினர்கள் மாநில சட்டப்பேரவை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel