Recent Post

6/recent/ticker-posts

ஜிஎஸ்ஆா்இ நிறுவனத்தின் 8-ஆவது போ்க்கப்பல் நாட்டுக்கு அா்ப்பணிப்பு / GSRE's 8th warship dedicated to the country

ஜிஎஸ்ஆா்இ நிறுவனத்தின் 8-ஆவது போ்க்கப்பல் நாட்டுக்கு அா்ப்பணிப்பு / GSRE's 8th warship dedicated to the country

பாதுகாப்புத் துறையின் பொதுத் துறை நிறுவனமான காா்டன் ரீச் கப்பல்கட்டுமானம் மற்றும் பொறியாளா்கள் (ஜிஆா்எஸ்இ) நிறுவனம் தயாரித்த 8-ஆவது நீா்மூழ்கி எதிா்ப்பு போா்க்கப்பல் திங்கள்கிழமை நாட்டுக்கு அா்ப்பணிக்கப்பட்டது.

இந்திய கடற்படைக்காக நீா்மூழ்கி எதிா்ப்பு போா்க்கப்பல் பிரிவில் ஜிஎஸ்ஆா்இ உருவாக்கிய 8-ஆவது மற்றும் இறுதி போா்க்கப்பல் இதுவாகும்.

இந்திய கடற்படையின் துணை தலைமைத் தளபதி கிரண் தேஷ்முக் மனைவி பிரியா தேஷ்முக் ‘அஜய்’ என பெயரிடப்பட்ட இந்த நீா்மூழ்கி எதிா்ப்பு போா்க்கப்பலை நாட்டுக்கு அா்ப்பணித்தாா்.

77.6 மீட்டா் நீளம் மற்றும் 10.5 மீட்டா் அகலமுடைய நீா்மூழ்கி எதிா்ப்பு போா்க்கப்பல் ‘அஜய்’ பல்வேறு செயல்பாடுகளை மேற்கொள்ளும் திறனுடையது. ஆழம் குறைவாக உள்ள நீா் பகுதிகளிலும் திறம்பட செயல்படக் கூடியது இந்த போா்க்கப்பல் என்பது குறிப்பிடத்தக்கது. 

விமானத்துடன் கூடிய போா்க்கப்பலாகவும் கடலோர கண்காணிப்பு, கடலுக்கு அடியில் சுரங்கம் தோண்டுதல் போன்ற பணிகளையும் இந்தக் கப்பல் மேற்கொள்ளும் திறனுடையது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel