ரஷியாவின் கம்சாட்கா தீபகற்ப பகுதிக்கு அருகில் புதன்கிழமை காலை 8.25 மணிக்கு பூமிக்கு அடியில் 20 கி.மீட்டர் ஆழத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இது ரிக்டர் அளவுகோலில் 8.7 ஆகப் பதிவாகியுள்ளதாக ஜப்பானின் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஜப்பானின் கடலோர பகுதிகளில் 3 அடி உயரத்திற்கு கடலலைகள் எழும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதையடுத்து ஜப்பானின் பசிபிக் கடற்கரையில் 1 மீட்டர் வரை சுனாமி ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஜப்பானின் நான்கு பெரிய தீவுகளில் வடக்கே உள்ள ஹொக்கைடோவிலிருந்து சுமார் 250 கிலோமீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. மேலும், இது 3 கிலோமீட்டர் ஆழத்தில் தாக்கியதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
0 Comments