Recent Post

6/recent/ticker-posts

உலகப் பொதுமறை திருக்குறள் நூலினை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் / Chief Minister M.K. Stalin released the book TIRUKKURAL - Treasure of Universal Wisdom

உலகப் பொதுமறை திருக்குறள் நூலினை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் / Chief Minister M.K. Stalin released the book TIRUKKURAL - Treasure of Universal Wisdom

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (11.07.2025) தலைமைச் செயலகத்தில், பள்ளிக்கல்வித் துறை சார்பில் "உலகப் பொதுமறை திருக்குறள்" (TIRUKKURAL - Treasure of Universal Wisdom) என்னும் நூலினை வெளியிட்டார்.

இந்நூலினை தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் தனது முத்தமிழறிஞர் மொழிபெயர்ப்புத் திட்டத்தின் கீழ், சிகாகோ உலகத் தமிழ் மொழி அறக்கட்டளையுடன் சேர்ந்து கூட்டு வெளியீடாக வெளியிடுகிறது.

இத்திருக்குறள் நூல், எளிதில் வாசிப்பதற்கேற்ற விதத்தில் சீர் பிரிக்கப்பட்ட வடிவத்துடன் தமிழண்ணல் எழுதிய நுண்பொருள் விளக்கவுரை, பி.எஸ்.சுந்தரம் அவர்களின் ஆங்கில மொழிபெயர்ப்பு, ஒவ்வொரு அதிகாரத்திற்கும் ஓவியர் மணியம் செல்வத்தின் ஓவியம் என இருமொழிப்பதிப்பாக அமைந்துள்ளது. 

திருக்குறளைப் பயில விரும்பும் வெளிமாநிலத்தவர்கள், வெளிநாட்டவர்கள், மாணவர்கள் மற்றும் இளைய தலைமுறையினருக்கு இந்நூல் பெரிதும் பயன்தரும்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel