தமிழ்நாடு அரசுத் துறைகளின் முக்கிய தகவல்கள், திட்டங்கள் மற்றும் தேவையான இனங்களில் செய்தி ஊடகங்கள் மூலமாக சரியான நேரத்தில் பொதுமக்களுக்கு எடுத்துரைப்பதற்கும், பிற அரசு துறைகளுடன் ஒருங்கிணைப்பதற்கும் மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளை அரசு செய்தித் தொடர்பாளர்களாக அரசு நியமிக்கிறது.
முதல்வர் ஸ்டாலின், தமிழ்நாடு அரசுத் துறைகளின் முக்கிய தகவல்கள், திட்டங்கள் மற்றும் தேவையான இனங்களில் செய்தி ஊடகங்கள் மூலமாக சரியான நேரத்தில் பொதுமக்களுக்கு எடுத்துரைப்பதற்கும், பிற அரசு துறைகளுடன் ஒருங்கிணைப்பதற்கும், கீழ்க்கண்ட மூத்த இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகளை அரசு செய்தித் தொடர்பாளர்களாக நியமித்துள்ளார்.
டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன், ஐஏஎஸ், அரசு கூடுதல் தலைமைச் செயலாளர், தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர், தமிழ்நாடு மின்சார வாரியம்.
ககன்தீப் சிங் பேடி, ஐஏஎஸ், அரசு கூடுதல் தலைமைச் செயலாளர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை.
தீரஜ் குமார், ஐஏஎஸ், அரசு கூடுதல் தலைமைச் செயலாளர், உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை
பெ. அமுதா, ஐஏஎஸ், அரசு கூடுதல் தலைமைச் செயலாளர். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை
மேற்கண்ட அதிகாரிகள் எந்தெந்த துறை சம்மந்தமாக செய்திகள் வெளியிட வேண்டும் என முதல்வரின் ஆணைப்படி அவர்களுக்கு துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
அரசு செய்தி தொடர்பாளர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள துறைகளின் செயலாளர்கள், துறை சார்ந்த அறிவிப்புகள் மற்றும் சாதனைகளின் தகவல்களை அரசு செய்தி தொடர்பாளர்களுக்கு வழங்குவார்கள்.
அச்செய்திகளின் உண்மைத்தன்மையை உறுதி செய்தபின் தலைமைச் செயலாளரின் ஆலோசனையின் அடிப்படையில் அரசு செய்தி தொடர்பாளர்கள் செய்தி ஊடகங்களை சந்தித்து தகவல்களை துல்லியமாகவும், சரியாகவும் வெளியிடுவார்கள்.
அரசின் திட்டங்கள் மற்றும் தகவல்களை வேகமாகவும், சரியான தகவல்களை உரிய நேரத்தில் மக்களிடம் கொண்டு சேர்க்கவும் அரசு செய்தித் தொடர்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
0 Comments