உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு கட்டப்பட்ட ஐஎன்எஸ் நிஸ்டார் கப்பல் இன்று விசாகப்பட்டினத்தில் பாதுகாப்புத் துறை இணையமைச்சர் திரு சஞ்சய் சேத் முன்னிலையில் இந்திய கடற்படையில் இணைக்கப்பட்டுள்ளது.
இந்துஸ்தான் ஷிப்யார்ட் நிறுவனம் கட்டமைத்து தயாரிக்கும் இரண்டு ஆழ்கடல் தேடுதல் மற்றும் மீட்பு கப்பல்களில் இது முதலாவதாகும்.
ஐஎன்எஸ் நிஸ்டாரில் தொலைதூரத்தில் இயக்கப்படும் வாகனங்கள், சுயமாக இயக்கப்படும் ஹைப்பர்பேரிக் லைஃப் படகு, டைவிங் கம்ப்ரஷன் சேம்பர்கள் போன்ற அதிநவீன டைவிங் உபகரணங்கள் நிறுவப்பட்டுள்ளன.
இக்கப்பல் 300 மீட்டர் ஆழம் வரை டைவிங் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும். மேற்பரப்புக்குக் கீழே உள்ள ஆபத்தில் உள்ள டைவ் செய்யப்பட்ட நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து பணியாளர்களை மீட்டு வெளியேற்றுவதற்கான ஆழமான நீரில் மூழ்கும் மீட்புக் கப்பலுக்கான 'தாய் கப்பலாக'வும் இது செயல்படும்.
0 Comments