ஐநாவின் சர்வதேச அணுசக்தி அமைப்பின் கண்காணிப்பிலிருந்து வெளியேறுவதாக ஈரான் நாடாளுமன்றத்தில் சமீபத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில், இந்த தீர்மானத்தில் அந்நாட்டு அதிபர் கையெழுத்திட்டிருக்கிறார்.
இதன் மூலம் ஈரான், 'அணுசக்தி அமைப்பின்' கண்காணிப்பிலிருந்து வெளியேறியுள்ளது. ஈரான் அதிபர் மசூத் பெஷ்கியன் இது தொடர்பான சட்டத்தில் கையெழுத்திட்டிருப்பதை அந்நாட்டு அரசு தொலைக்காட்சி உறுதி செய்திருக்கிறது.
கடந்த ஜூன் 13ம் தேதியன்று இஸ்ரேல், ஈரானின் அணு ஆய்வு மையங்கள் மீது தாக்குதல் நடத்தியது. இதனை தொடர்ந்து அமெரிக்காவும் தாக்குதல் நடத்தியது.
இதன் காரணமாகவே சர்வதேச அணுசக்தி அமைப்பின்' கண்காணிப்பிலிருந்து வெளியேறுவதாக ஈரான் நாடாளுமன்றம் கூறியுள்ளது.
0 Comments