Recent Post

6/recent/ticker-posts

கார்வார் கூட்டுறவு வங்கியின் உரிமம் ரத்து – ரிசர்வ் வங்கி / Karwar Cooperative Bank License Cancelled – Reserve Bank

கார்வார் கூட்டுறவு வங்கியின் உரிமம் ரத்து – ரிசர்வ் வங்கி / Karwar Cooperative Bank License Cancelled – Reserve Bank

கர்நாடகாவை சேர்ந்த தி கார்வார் நகர்ப்புற கூட்டுறவு வங்கியிடம் போதுமான மூலதனம் மற்றும் வருவாய் வாய்ப்புகள் இல்லாததால், அதன் உரிமத்தை ரத்து செய்துள்ளதாக ரிசர்வ் வங்கி இன்று தெரிவித்தது.

இதன் விளைவாக இன்று (ஜூலை 23) வணிகம் முடியும் தேதியிலிருந்து வங்கி வணிகத்தை மேற்கொள்வதை நிறுத்தியது. கலைக்கப்பட்டவுடன், ஒவ்வொரு வைப்புத்தொகையாளரும் வைப்புத்தொகை காப்பீடு மற்றும் கடன் உத்தரவாதக் கழகத்திடமிருந்து ரூ.5 லட்சம் வரையிலான பண உச்சவரம்பு வரையிலான வைப்புத்தொகை காப்பீட்டு கோரிக்கை தொகையைப் பெற உரிமை பெறுவார்கள்.

வங்கி சமர்ப்பித்த தரவுகளின்படி, 92.9 சதவிகித வைப்புத்தொகையாளர்கள் வைப்புத்தொகை காப்பீடு மற்றும் கடன் உத்தரவாதக் கழகத்திடமிருந்து தங்கள் வைப்புத்தொகையின் முழுத் தொகையையும் பெற உரிமை பெறுவர் என்றது ரிசர்வ் வங்கி.

ஜூன் 30, 2025 நிலவரப்படி, மொத்த காப்பீட்டு வைப்புத்தொகைகளில் ரூ.37.79 கோடியை டிஐசிஜிசி ஏற்கனவே செலுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel