ஹரியானாவின் குருகிராமில் உள்ள மனேசரில் சர்வதேச ஆட்டோமேட்டிவ் தொழில்நுட்ப மையத்தில், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர்களின் முதலாவது தேசிய அளவிலான மாநாட்டை நாளை (ஜூலை 03) மக்களவைத் தலைவர் திரு ஓம் பிர்லா தொடங்கி வைக்கிறார்.
மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சர் திரு மனோகர் லால், ஹரியானா முதலமைச்சர் திரு நயாப் சிங், ஹரியானா சட்டப்பேரவைத் தலைவர் திரு ஹர்விந்தர் கல்யாண் மற்றும் பல பிரமுகர்கள் தொடக்க அமர்வில் கலந்து கொள்கின்றனர்.
விரைவாக நகரமயமாக்கப்பட்டு வரும் நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் முக்கியப் பங்கை சுட்டிக் காட்டுவதற்கான ஒரு முக்கிய தளமாக செயல்படுவதை இந்த மாநாடு நோக்கமாகக் கொண்டுள்ளது.
சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்து கொள்ளுதல், நகர்ப்புற நிர்வாகத்திற்கான புதுமையான அணுகுமுறைகளை ஆராய்ந்து முன்னிலைப்படுத்துதல் ஆகியவற்றையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
அரசியலமைப்பு ஜனநாயகம் மற்றும் நாட்டின் கட்டமைப்பை வலுப்படுத்துவதில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் பங்கு என்ற கருப்பொருளில் இம்மாநாடு நடைபெறுகிறது.
0 Comments