பிரேசில் குடியரசின் அதிபர் திரு லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வா அழைப்பின் பேரில் இந்திய பிரதமர் திரு நரேந்திர மோடி 2025 ஜூலை 8 அன்று, பிரேசில் நாட்டிற்கு பயணம் மேற்கொண்டார்.
இதையடுத்து வரவிருக்கும் தசாப்தங்களில் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த ஐந்து முக்கிய அம்சங்களைக் கொண்ட உத்திசார்ந்த திட்டத்தை வகுக்க இருதலைவர்களும் முடிவு செய்துள்ளனர்.
இதனிடையே இரு நாடுக்களுக்கு இடையே 6 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்துகியுள்ள்ளன.
சர்வதேச பயங்கரவாதம் மற்றும் எல்லை கடந்த திட்டமிடப்பட்ட குற்றங்களை எதிர்கொள்வது குறித்த ஒத்துழைப்புக்கான ஒப்பந்தம்.
டிஜிட்டல் மாற்றத்தில் வெற்றிகரமான பெரிய அளவிலான டிஜிட்டல் தீர்வுகளைப் பகிர்ந்து கொள்வதற்கான ஒத்துழைப்பில் ஒப்பந்தம்
புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் ஒத்துழைப்புக்கான ஒப்பந்தம்.
பிரேசில் வேளாண் ஆராய்ச்சிக் கழகம் மற்றும் இந்திய வேளாண் ஆராய்ச்சி குழுமம் இடையே வேளாண் ஆராய்ச்சிக்கான ஒப்பந்தம்.
வகைப்படுத்தப்பட்ட தகவல்களின் பரிமாற்றம் மற்றும் பரஸ்பர பாதுகாப்புக்கான ஒப்பந்தம்.
இந்தியாவின் தொழில்துறை மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத்துறை மற்றும் பிரேசிலின் வர்த்தகம், தொழில்துறை மேம்பாட்டு கழகத்தின் போட்டித்திறன் மற்றும் ஒழுங்குமுறை கொள்கை செயலகம் ஆகியவற்றுக்கு இடையே அறிவுசார் சொத்துரிமைத் துறையில் ஒத்துழைப்புக்கான ஒப்பந்தம்.
0 Comments