பிரதமர் திரு நரேந்திர மோடி பீகாரின் மோத்திஹரியில் இன்று (18.07.2025) 7,000 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியதுடன், முடிவுற்ற திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்து வைத்தார்.
தியாகத்தைக் குறிக்கும் சவான் மாதத்தில் பாபா சோமேஸ்வர் நாத் பாதங்களை வணங்கி அவரது ஆசியுடன் பீகார் மாநில மக்கள் வாழ்வாதார மேம்பாடு, மகிழ்ச்சியுடன் வாழ்த்துவதாக தெரிவித்துள்ளார்.
பீகார் மாநிலத்தில் 61,500 சுய உதவிக் குழுக்களுக்கு, தீனதயாள் அந்த்யோதயா திட்டம் - தேசிய கிராமப்புற வாழ்வாதாரத் திட்டத்தின் கீழ், ரூ.400 கோடி நிதியுதவியை பிரதமர் விடுவித்தார்.
பிரதமரின் கிராமப்புற வீட்டுவசதித் திட்டத்தின் கீழ் 40,000 பயனாளிகளுக்கு ரூ.160 கோடிக்கும் அதிகமான நிதியுதவியை பிரதமர் வழங்கினார்.
0 Comments