Recent Post

6/recent/ticker-posts

விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்று சின்னர் புதிய சாதனை / sinner sets new record by winning Wimbledon tennis championship

விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்று சின்னர் புதிய சாதனை / sinner sets new record by winning Wimbledon tennis championship

கிராண்ட்ஸ்லாம் தொடரில் உயரிய அந்தஸ்து பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடைபெற்று வந்தது.

இதில் நேற்றிரவு நடந்த ஆடவர் ஒற்றையர் இறுதி போட்டியில் நம்பர் 1 வீரரான இத்தாலியின் 23 வயதான ஜானிக் சின்னர், 2ம் நிலை வீரரான ஸ்பெயினின் 22 வயது அல்காரஸ் பலப்பரீட்சை நடத்தினர்.

விறுவிறுப்புடன் தொடங்கிய இதில் முதல் செட்டை 6-4 என அல்காரஸ் கைப்பற்றினார். ஆனால் அடுத்த 3 செட்டையும் 6-4, 6-4, 6-4 என கைப்பற்றி ஜானிக் சின்னர் சாம்பியன் பட்டம் வென்றார்.

அவருக்கு ரூ.35 கோடி பரிசாக வழங்கப்பட்டது. ஆடவர் ஒற்றையர் பிரிவில் விம்பிள்டன் சாம்பியன் பட்டம் வென்ற முதல் இத்தாலி வீரர் என்ற சிறப்பை அவர் படைத்தார்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel