Recent Post

6/recent/ticker-posts

TAMILNADU STATE PLANNING COMMISSION REPORT 2025 / மாநில திட்டக்குழு தயாரித்துள்ள 4 முக்கிய அறிக்கைகள் 2025

TAMILNADU STATE PLANNING COMMISSION REPORT 2025
மாநில திட்டக்குழு தயாரித்துள்ள 4 முக்கிய அறிக்கைகள் 2025

TAMILNADU STATE PLANNING COMMISSION REPORT 2025 / மாநில திட்டக்குழு தயாரித்துள்ள 4 முக்கிய அறிக்கைகள் 2025

TAMIL

TAMILNADU STATE PLANNING COMMISSION REPORT 2025 / மாநில திட்டக்குழு தயாரித்துள்ள 4 முக்கிய அறிக்கைகள் 2025: மாநில திட்டக்குழு தயாரித்துள்ள 4 முக்கிய அறிக்கைகள், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் இன்று வழங்கப்பட்டுள்ளன. தலைமைச் செயலகத்தில், துணை முதலமைச்சரும், மாநில திட்டக் குழுவின் அலுவல் சார் துணைத் தலைவருமான உதயநிதி ஸ்டாலின் மற்றும் மாநில திட்டக் குழுவின் செயல் துணைத் தலைவர் ஜெ.ஜெயரஞ்சன் ஆகியோர் சந்தித்து, மாநில திட்டக் குழுவால் தயாரிக்கப்பட்ட - தமிழ்நாட்டில் பயன்பாட்டில் இல்லாத சுரங்கங்களின் மறுசீரமைப்பு சாத்திய கூறுகளை மதிப்பீடு செய்தல், குழந்தைகளின் ஊட்டச்சத்து - முக்கிய சவால்களும், தீர்க்கும் உத்திகளும், தமிழ்நாட்டில் இரண்டாம் நிலை நகரங்களில் நகர்ப்புற மீள்தன்மையை மேம்படுத்துவதற்கான இயற்கை அடிப்படையிலான தீர்வுகளின் (NbS) கட்டமைப்பு, நகர்ப்புற வளர்ச்சி மற்றும் வெப்பம் அழுத்தம்: தமிழ்நாட்டில் கட்டமைக்கப்பட்ட பகுதிகள் மற்றும் காலநிலை- பத்தாண்டுகளுக்கான மதிப்பீடு ஆகிய 4 அறிக்கைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கினார்கள்.

மாநில திட்டக்குழுவானது மாண்புமிகு முதலமைச்சர் தலைமையில் செயல்படும் ஓர் உயர்மட்ட ஆலோசனைக் குழுவாகும். தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் முன்னோடி மக்கள் நல திட்டங்களை மதிப்பீட்டு ஆய்வு செய்தல் மற்றும் அரசு ஆளுகையில் எழும் புதிய தேவைகளுக்கேற்ப கொள்கை முடிவுகளை எடுப்பதிலும், பல்வேறு ஆய்வுகள் நடத்தி அறிக்கை தயாரிப்பதிலும் தனது பங்களிப்பை மாநில திட்டக்குழு நல்கி வருகிறது.

முதலமைச்சரிடம் சமர்பித்த அறிக்கைகளின் முக்கிய அம்சங்கள்


1. தமிழ்நாட்டில் பயன்பாட்டில் இல்லாத சுரங்கங்களின் மறுசீரமைப்பு சாத்திய கூறுகளை மதிப்பீடு செய்தல்

TAMILNADU STATE PLANNING COMMISSION REPORT 2025 / மாநில திட்டக்குழு தயாரித்துள்ள 4 முக்கிய அறிக்கைகள் 2025: ஆரோவில் தாவரவியல் சேவைகள், தமிழ்நாடு மாநில திட்டக்குழுவுடன் இணைந்து சுற்றுச்சூழல் மறுசீரமைப்பிற்காக, மாநிலம் முழுவதும் கைவிடப்பட்ட மற்றும் குறைவாக பயன்படுத்தும் சுரங்கப் பகுதிகளைக் கண்டறிந்து அவற்றை மதிப்பீடு செய்து, புவிசார் தொழில் நுட்பங்கள் மற்றும் செயற்கைகோள் தொழில்நுட்பத்துடன் தமிழ்நாட்டில் உள்ள 3000-க்கும் மேற்பட்ட சுரங்கங்கள் வரைபடங்களாக்கப்பட்டு அவற்றில் மாதிரி தேர்வு முறையின் அடிப்படையில் 40 சுரங்கங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன. 

இச்சுரங்கங்களை ஆய்வு செய்து மண்ணின் தரம், நீர் இருப்பு, நிலைத்தன்மை மற்றும் சுற்றுச்சூழல் போன்ற காரணிகளின் அடிப்படையில் அவற்றை மறுசீரமைப்பிற்கான திறன் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. 

பல்லுயிர் பெருக்கம், நீர் பாதுகாப்பு, வேளாண் காடு வளர்ப்பு, பொழுதுபோக்கு பூங்கா அமைத்தல் மற்றும் சூரிய ஆற்றல் மேம்பாடு போன்றவற்றின் அடிப்படையில் சுரங்கங்களின் மறுசீரமைப்பு தன்மை பிரித்து வழங்கப்பட்டுள்ளது. 

சுண்ணாம்புக் கல் மற்றும் மேக்னிசைட் சுரங்கங்கள் அவற்றின் அளவு மற்றும் மென்மையான மேற்பரப்பின் காரணமாக சுரங்கங்களின் மீட்டெடுப்பு சாத்தியமுள்ளவையாக உள்ளன. 

அதேசமயம், கிரானைட் மற்றும் கரடுமுரடான கற்சுரங்கங்கள், கடினமான பாறை மேற்பரப்புகள் ஆகியவற்றால் சில சுரங்கங்களை மீட்டெடுப்பதில் அதிக அளவு சிரமங்கள் உள்ளது. 

இந்த ஆய்வு, தரவு சார்ந்த கட்டமைப்பின் வாயிலாக நிலையான நிலப்பயன்பாட்டுத் திட்டமிடலை வழிநடத்தவும், சீரழிந்த சுரங்கப் பகுதிகளை சூழலியல் மற்றும் சமூகத்திற்கு நன்மை பயக்கும் நிலபரப்புகளாக மாற்றவும் உதவும்.

2. குழந்தைகளின் ஊட்டச்சத்து - முக்கிய சவால்களும், தீர்க்கும் உத்திகளும்

TAMILNADU STATE PLANNING COMMISSION REPORT 2025 / மாநில திட்டக்குழு தயாரித்துள்ள 4 முக்கிய அறிக்கைகள் 2025: குழந்தைகளின் ஊட்டச்சத்துக் குறைப்பாட்டின் வெளிப்பாடுகளான தீவிர மெலிவு, உயரக்குறைவு, எடைகுறைவு ஆகிய நிலைகள், நுண்ணூட்டச்சத்துக் குறைபாடுகளின் அடிப்படையில், ஒரு முயற்சியாக, தமிழ்நாடு அரசின் மாநில திட்டக்குழு, மருத்துவ வல்லுநர்கள், ஊட்டச்சத்து வல்லுநர்கள், துறைசார் வல்லுநர்கள், கள ஆராய்ச்சியாளர் மற்றும் அலுவலர்கள் கொண்டு ஒரு கருத்தரங்கத்தை 2025 மார்ச் மாதத்தில் நடத்தியது. 

இக்கருத்தரங்கில், குழந்தைகளின் ஊட்டச்சத்துக் குறைபாடு குறிப்பாக கடுமையான தீவிர ஊட்டச்சத்துக் குறைபாடு, மிதமான தீவிர ஊட்டச்சத்துக் குறைபாடு குறித்த விவாதங்கள் நடைபெற்றது. 

இக்கருத்தரங்கின் முக்கிய நோக்கங்களாவன: ஊட்டச்சத்து மேம்பாட்டிற்கான அமைப்புகளை வலுப்படுத்துதல், ஊட்டச்சத்து மேம்பாட்டிற்கென பணி செய்யும் பல்துறை வல்லுநர்களின் திறனை மேம்படுத்துதல், இது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துதல். பிற பகுதிகளில் செயல்படுத்தப்படும் சிறந்த நடைமுறைகளைப் பகிர்தல் மற்றும் ஆதார உருவாக்கம், தொழில் நுட்ப ஆளுகை ஆகியவை அடங்கும். 

அதனை தொடர்ந்து பல ஆலோசணைகள் மேற்கொள்ளப்பட்டு தயாரிக்கப்பட்ட இந்த அறிக்கை, குழந்தை ஊட்டச்சத்து குறித்த விரிவான கண்ணோட்டத்தை வழங்குகிறது. 

கடுமையான தீவிர ஊட்டச்சத்துக் குறைப்பாடு (SAM) மற்றும் மிதமான தீவிர ஊட்டச்சத்துக் குறைப்பாடு (MAM) ஆகியவற்றின் காரணங்கள் மற்றும் சிகிச்சையில் கவனம் செலுத்துகிறது. 

தொடர்ந்து ஆரம்ப கால தாய்ப்பாலூட்டல், குழந்தையின் ஆறு மாத காலம் வரை தாய்ப்பால் மட்டுமே ஊட்டுதல், சிகிச்சை முறை உணவு, (உணவில் பன்முகத்தன்மை (அ) பலவகையான உணவுகள்), உடலுக்கு உகந்த உணவு முறைகள், குடல் ஆரோக்கியத்தின் முக்கியவத்துவம், தொடர்ந்து வளர்ச்சியைக் கண்காணித்தல் மற்றும் செலவு குறைந்த பிற ஊட்டச்சத்து தலையீடுகள் /திட்டங்கள் குறித்த தகவல்களை இந்த அறிக்கை ஒருங்கிணைத்து வழங்குகிறது. 

குழந்தை ஊட்டச்சத்தை மேம்படுத்துவதற்கும், ஊட்டச்சத்துக் குறைப்பாட்டை எதிர்த்துப் போராடுவதில் மீள்திறன் கொண்ட சுகாதார அமைப்புகளை உருவாக்குவதற்கும் ஆதாரம் சார்ந்த உத்திகளையும் இது ஆராய்ந்து அளிக்கிறது.

3. தமிழ்நாட்டில் இரண்டாம் நிலை நகரங்களில் நகர்ப்புற மீள்தன்மையை மேம்படுத்துவதற்கான இயற்கை அடிப்படையிலான தீர்வுகளின் (NbS) கட்டமைப்பு

TAMILNADU STATE PLANNING COMMISSION REPORT 2025 / மாநில திட்டக்குழு தயாரித்துள்ள 4 முக்கிய அறிக்கைகள் 2025: தமிழ்நாட்டில் அதிக அளவில் நகரமயமாதல் மற்றும் நகரங்களில் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் நகர்ப்புற வெள்ளம், வெப்ப அலைகள், நீர் பற்றாக்குறை மற்றும் பல்லுயிர் இழப்பு உள்ளிட்ட சவால்களை எதிர்கொள்ளவும், நிலையான நகர்ப்புற மேம்பாட்டிற்கான அவசர தேவையை உணர்ந்து, தமிழ்நாடு மாநில திட்டக்குழுவின் தமிழ்நாடு நிலப்பயன்பாடு ஆராய்ச்சி வாரியம், சர்வதேச நிறுவனமான ஜெர்மன் கூட்டமைப்பு (GIZ) மற்றும் CUBE (IIT Madras) உடன் இணைந்து நகர்புற மீட்டெடுத்தலை மேம்படுத்த ஒருங்கிணைந்த இயற்கைசார் தீர்வு (NbS) செயல் உத்தி மற்றும் கட்டமைப்பு அறிக்கையை தமிழ்நாட்டில் உள்ள இரண்டாம் நிலை நகரத்திற்காக (Tier-2 Cities) தயாரித்து வெளியிட்டுள்ளது.

இந்த அறிக்கை, இயற்கைசார் தீர்வு மூலமாக இயற்கை சுற்றுச்சூழல் அமைப்புகள், காலநிலை மீள்தன்மை, சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு ஆகியவற்றை உள்ளடக்கிய மேம்பாட்டை இரண்டாம் நிலை நகரங்களில் வழங்க உதவுகிறது. 

தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கம் மற்றும் காலநிலை மாற்றத்திற்கான மாநில செயல் திட்டம் (SAPCC 2.0) ஆகியவற்றின் அடிப்படையில், இந்த கட்டமைப்பு பாதிப்பு மற்றும் இடர் மதிப்பீடு, இடர்சார்ந்து ஆய்வு, பங்குதாரர்களின் ஆலோசனைகள், சூழலுக்கு பொருத்தமான மாதிரியை தேர்ந்தெடுப்பது, இயற்கை சார் தீர்வுகளை அடையாளம் காணுதல் மற்றும் நிர்வாக அமைப்புகள் என ஆறு கட்டமாக அமைந்த செயல்முறையை முன்மொழிகிறது.

தமிழ்நாடு மற்றும் உலகளாவிய நடைமுறைகள், வெற்றிகரமான எடுத்துக்காட்டுகளின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட இவ்வறிக்கை, சென்னை மற்றும் கோயம்புத்துரில் உள்ள ஈரநில மீட்பு, பிச்சாவரத்தில் உள்ள சதுப்புநிலத்தில் அலையாத்தி காடுகளை உருவாக்குதல் மற்றும் சிறிய நகரங்களில் மேற்கொண்டுள்ள பசுமை உட்கட்டமைப்புகள் போன்றவற்றை சான்றாக எடுத்துக்காட்டுகிறது. 

பேரழிவு காலங்களில் அபாயங்களை குறைப்பதற்கும், நகர்ப்புற வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கும் மற்றும் சுற்றுச்சூழல் சேவைகளை மீட்டெடுப்பதற்கும், இரண்டாம் நிலை நகரங்களில் இம்முறையை பயன்படுத்துவதன் முக்கியத்துவத்தை இவ்வறிக்கை வலியுறுத்துகிறது. 

மேலும், ஒருங்கிணைந்த புவியியல் தகவலமைப்பின் அடிப்படையிலான பாதிப்புக் குறியீடுகள் உள்ளிட்ட முக்கிய செயல்படுத்துதல்களை எடுத்துக்காட்டுகிறது.

இவ்வறிக்கையானது கொள்கைகள், வரையறுக்கப்பட்ட நிதி ஒதுக்கீடு மற்றும் குறைந்த விழிப்புணர்வு போன்ற தடைகளை கண்டறிந்து கொள்கை சீர்திருத்தம், சிறப்பு திட்டங்கள், மாநில இயற்கை சார் தீர்வு மையம் நிறுவுதல் உள்ளிட்ட 10 அம்ச ஆலோசனைகளை முன்மொழிகிறது. 

நிலையான வளர்ச்சி இலக்குகள் மற்றும் தமிழ்நாடு தொலைநோக்கு 2030-ன் அடிப்படையில் நகர்ப்புற நெகிழ்ச்சித் தன்மையை அளவிடுவதற்கு தமிழ்நாடு இயற்கை சார் தீர்வுகளை ஒரு சிறப்பு திட்டமாக செயல்படுத்த இந்த அறிக்கை பரிந்துரைக்கிறது.

4. நகர்ப்புற வளர்ச்சி மற்றும் வெப்ப அழுத்தம்: தமிழ்நாட்டில் கட்டமைக்கப்பட்ட பகுதிகள் மற்றும் காலநிலை மாற்றங்கள் குறித்த பத்தாண்டுகளுக்கான மதிப்பீடு

TAMILNADU STATE PLANNING COMMISSION REPORT 2025 / மாநில திட்டக்குழு தயாரித்துள்ள 4 முக்கிய அறிக்கைகள் 2025: தமிழ்நாட்டில் வளர்ந்து வரும் காலநிலை மாற்றம் நமது வருங்கால சந்ததியினருக்கு சுகாதாரம், உணவு, சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதாரத்தில் பெரும் அச்சுறுத்தலாகவே இருந்து வருகிறது. தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் வெப்பநிலையினால், வானிலை மாற்றங்கள், நகர்புற வெப்பத்தன்மை மற்றும் நிலையில்லா வேளாண்மை ஆகிய பாதிப்புகள் ஏற்படுகிறது. இந்த அறிக்கையானது மாநில திட்டக் குழுவின் தமிழ்நாடு மாநில நிலப்பயன்பாட்டு ஆராய்ச்சி வாரியத்தால் தயாரிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் வெப்பத் தணிப்பு உத்தி 2024-ன் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட இவ்வறிக்கையானது தமிழ்நாட்டிலுள்ள வட்டார அளவிலான வெப்ப வெளிப்பாடு தொடர்பான விரிவான பகுப்பாய்வை வழங்குகிறது. 

நிலப் பயன்பாட்டில் ஏற்படும் மாற்றங்கள், குறிப்பாக நகரமயமாக்கல் மற்றும் காடுகளை அழித்தல் ஆகியவை காலநிலை மாற்றங்களுக்கு பங்களிக்கின்றன. இது நகர்ப்புற வெப்பத் தீவு விளைவை அதிகரிக்கிறது என்பதை இவ்வறிக்கை எடுத்துக்காட்டுகிறது. 

அதிகரிக்கும் கட்டட மேற்பரப்பு வெப்பநிலையை அதிகரித்து காலநிலையை பெரிதும் பாதிக்கிறது. இந்த ஆய்வு, நில மேற்பரப்பு வெப்பநிலை உயர்வு, வருடாந்திர மற்றும் பருவகால வெப்பநிலை மாறுபாடுகள் மற்றும் வெப்பத்தணிப்பு குறியீடு ஆகியவற்றை ஆராய்கிறது.

தமிழ்நாடு முழுவதும் வெப்பம் கணிசமாக அதிகரித்திருப்பதை ஆராய்ச்சிகள் சுட்டிக்காட்டுகின்றன. பகுப்பாய்வு செய்யப்பட்ட 94 வட்டாரங்களில், 64 வட்டாரங்கள் தற்போது அதிக வெப்பநிலையைக் கொண்டுள்ளன. 

சென்னை, கரூர் மற்றும் இராமநாதபுரம் உள்ளிட்ட 25 வட்டாரங்கள் நீண்ட கால மற்றும் தற்போதைய வெப்ப தாக்கங்களை எதிர்கொள்கின்றன. கடலோர மற்றும் புறநகர்ப் பகுதிகள் குறிப்பாக பாதிக்கப்படக்கூடியவையாக உள்ளன. 

அதிகரித்து வரும் வெப்பத்திற்கு நகரமயமாதல் ஒரு முக்கிய காரணி என ஆய்வு கூறுகிறது. கட்டடப் பகுதிகளின் விரிவாக்கம் மற்றும் அதிகரித்து வரும் வெப்பநிலை ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. 

சில மாவட்டங்களில் வெப்பநிலை மாநில சராசரியை விட இரண்டு டிகிரி செல்சியஸ் வரை அதிகரித்துள்ளது. இந்த சவால்களை எதிர்கொள்ள, தொடர்ச்சியான வெப்பநிலை கண்காணிப்பு, இயற்கையை அடிப்படையாகக் கொண்ட குளிரூட்டும் தீர்வுகளை ஏற்றுக்கொள்வது, காலநிலை-உணர்திறன் கொண்ட கட்டட தொழில்நுட்பங்களை செயல்படுத்துதல் மற்றும் அதிக பாதிப்புள்ள வட்டாரங்களுக்கு முன்னுரிமை அளித்தல் ஆகியவற்றை இந்த அறிக்கை பரிந்துரைக்கிறது. 

வளர்ந்து வரும் வெப்ப அபாயங்களை மிகவும் திறம்பட நிர்வகிக்க வட்டார அளவிலான திட்டமிடலில் உள்ளூர் நில பயன்பாட்டுடன் காலநிலை தரவுகளையும் ஒருங்கிணைப்பதன் முக்கியத்துவத்தை இது வலியுறுத்துகிறது. 

இந்நிகழ்வின்போது, தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம், திட்டம் மற்றும் வளர்ச்சித் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் ரமேஷ் சந்த் மீனா, மாநில திட்டக் குழுவின் உறுப்பினர் செயலர் எஸ். சுதா, மாநில திட்டக் குழுவின் முழு நேர உறுப்பினர் ஜோதி சிவஞானம் ஆகியோர் உடன் இருந்தனர்.

ENGLISH

TAMILNADU STATE PLANNING COMMISSION REPORT 2025: Four major reports prepared by the State Planning Committee were presented to Chief Minister M.K. Stalin today. Deputy Chief Minister and Executive Vice Chairman of the State Planning Committee Udhayanidhi Stalin and Acting Vice Chairman of the State Planning Committee J. Jayaranjan met at the Secretariat and presented four reports prepared by the State Planning Committee - Assessment of the feasibility of redevelopment of disused mines in Tamil Nadu, Child Nutrition - Key Challenges and Strategies for Resolution, Nature-Based Solutions (NbS) Framework for Improving Urban Resilience in Tier II Cities in Tamil Nadu, Urban Growth and Heat Stress: Built-up Areas and Climate in Tamil Nadu - A Decade-long Assessment - to Chief Minister M.K. Stalin.

The State Planning Committee is a high-level advisory committee headed by the Hon'ble Chief Minister. The State Planning Commission has been contributing to the evaluation of the pilot public welfare schemes implemented by the Government of Tamil Nadu and to the policy decisions taken in accordance with the new needs arising in the governance of the State, and to the preparation of various studies and reports.

Salient features of the reports submitted to the Chief Minister


1. Assessment of the potential for rehabilitation of disused mines in Tamil Nadu

TAMILNADU STATE PLANNING COMMISSION REPORT 2025: Auroville Botanical Services, in collaboration with the Tamil Nadu State Planning Commission, identified and assessed abandoned and underutilized mining areas across the state for environmental rehabilitation. 

More than 3000 mines in Tamil Nadu were mapped using geospatial techniques and satellite technology and 40 mines were selected based on a random sampling method. 

These mines were inspected and their potential for rehabilitation was assessed based on factors such as soil quality, water availability, sustainability and environment. The rehabilitation of mines is categorized based on biodiversity, water conservation, agroforestry, recreational parks and solar energy development. Limestone and magnesite mines are the most likely to be rehabilitated due to their size and smooth surface. 

However, granite and rough stone mines, with their hard rock surfaces, pose greater challenges in rehabilitating some mines. This study will help guide sustainable land use planning through a data-driven framework and transform degraded mining areas into ecologically and socially beneficial landscapes.

2. Child Nutrition - Key Challenges and Strategies to Address The following

TAMILNADU STATE PLANNING COMMISSION REPORT 2025: In an effort to address the manifestations of child malnutrition such as wasting, stunting, and underweight, and micronutrient deficiencies, the State Planning Commission of the Government of Tamil Nadu organized a seminar in March 2025 with medical experts, nutritionists, sectoral experts, field researchers, and officials. 

The seminar discussed child malnutrition, especially severe acute malnutrition and moderate acute malnutrition. The main objectives of the seminar were: to strengthen institutions for nutrition improvement, to improve the capacity of multidisciplinary professionals working on nutrition improvement, to create awareness on this. 

It includes sharing best practices implemented in other areas and building resources and technical governance. This report, which was prepared after several consultations, provides a comprehensive overview of child nutrition. 

The report focuses on the causes and treatment of severe acute malnutrition (SAM) and moderate acute malnutrition (MAM). It provides information on continuous early breastfeeding, exclusive breastfeeding for six months, therapeutic feeding (diversity in the diet), healthy eating patterns, the importance of gut health, continuous growth monitoring and other cost-effective nutrition interventions/programmes. 

It also explores evidence-based strategies to improve child nutrition and build resilient health systems to combat malnutrition.

3. Nature-Based Solutions (NbS) Framework for Improving Urban Resilience in Tier-2 Cities in Tamil Nadu

TAMILNADU STATE PLANNING COMMISSION REPORT 2025: Recognizing the urgent need for sustainable urban development to address the challenges of rapid urbanization and environmental and climate change in cities, including urban flooding, heat waves, water scarcity and biodiversity loss, the Tamil Nadu Land Use Research Board of the Tamil Nadu State Planning Commission, in collaboration with the international agency German Federal Government (GIZ) and CUBE (IIT Madras), has prepared and released an Integrated Nature-Based Solutions (NbS) Action Strategy and Framework Report for Improving Urban Resilience for Tier-2 Cities in Tamil Nadu.

This report aims to provide development in Tier-2 cities that incorporates natural ecosystems, climate resilience and ecological restoration through nature-based solutions. 

Based on the Tamil Nadu Climate Change Initiative and the State Action Plan for Climate Change (SAPCC 2.0), the framework proposes a six-step process: vulnerability and risk assessment, risk assessment, stakeholder consultation, selection of an environmentally appropriate model, identification of natural solutions and governance structures.

The report, prepared based on successful examples from Tamil Nadu and global practices, highlights examples such as wetland restoration in Chennai and Coimbatore, mangrove afforestation in Pichavaram and green infrastructure in small towns. 

The report emphasizes the importance of using this approach in secondary cities to reduce risks, improve urban livelihoods and restore ecosystem services during disasters. It also highlights key implementations, including vulnerability indices based on integrated geographic information systems.

The report identifies barriers such as policies, limited funding and low awareness and proposes 10-point recommendations including policy reform, special projects and establishment of a State Nature-Based Solutions Centre. 

The report recommends implementing Tamil Nadu Nature-Based Solutions as a special project to measure urban resilience in line with the Sustainable Development Goals and Tamil Nadu Vision 2030.

4. Urban Growth and Heat Stress: A Decadal Assessment of Built Environment and Climate Change in Tamil Nadu

TAMILNADU STATE PLANNING COMMISSION REPORT 2025: The growing threat of climate change in Tamil Nadu poses a major threat to our future generations in terms of health, food, environment and economy. 

The rising temperature in Tamil Nadu is causing adverse effects on weather patterns, urban heat stress and unstable agriculture. This report has been prepared by the Tamil Nadu State Land Use Research Board of the State Planning Committee.

Prepared based on the Tamil Nadu Heat Mitigation Strategy 2024, this report provides a detailed analysis of district-level heat exposure in Tamil Nadu. Changes in land use, especially urbanization and deforestation, contribute to climate change. 

The report highlights that this increases the urban heat island effect. Increasing building surface temperatures significantly affect the climate. The study examines the land surface temperature rise, annual and seasonal temperature variations and the heat index.

The research indicates that temperatures have increased significantly across Tamil Nadu. Out of the 94 districts analyzed, 64 districts currently have high temperatures. 25 districts, including Chennai, Karur and Ramanathapuram, are facing long-term and current heat impacts. 

Coastal and suburban areas are particularly vulnerable. Urbanization is a major factor in the rising temperatures, the study says. The expansion of built-up areas and rising temperatures are interrelated. In some districts, temperatures have increased by up to two degrees Celsius above the state average.

To address these challenges, the report recommends continuous temperature monitoring, adoption of nature-based cooling solutions, implementation of climate-sensitive building technologies, and prioritization of high-risk areas. 

It emphasizes the importance of integrating climate data with local land use in regional planning to more effectively manage emerging heat risks.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel