Recent Post

6/recent/ticker-posts

பிரதமர் மோடிக்கு டிரினிடாட் டொபாகோ இந்தியாவின் உயரிய விருது / Trinidad and Tobago confers India's highest award on PM Modi

பிரதமர் மோடிக்கு டிரினிடாட் டொபாகோ இந்தியாவின் உயரிய விருது / Trinidad and Tobago confers India's highest award on PM Modi

பிரதமர் மோடி ஆப்பிரிக்க நாடான கானாவில் 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கிருந்து கரீபியன் தீவு நாடான டிரினிடாட்-டொபாகோ சென்றுள்ளார்.

அங்கு மோடி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அத்துடன் அங்கேயே பிரதமர் மோடிக்கு பாரம்பரிய அணிவகுப்பும், ராணுவ மரியாதையும் வழங்கப்பட்டது. 1999-ம் ஆண்டுக்குப்பிறகு இந்திய பிரதமர் ஒருவர் டிரினிடாட் டொபாகோ செல்வது இதுவே முதல் முறையாக கருதப்படுகிறது. 

கவுவாவில் திரண்ட ஏராளமான இந்தியர்கள் மத்தியில் பிரதமர் மோடி உரை நிகழ்த்தினார். சுமார் 13 லட்சம் மக்கள் தொகை கொண்ட டிரினிடாட் டொபாகோவில் 45 சதவீதத்தினர் இந்திய வம்சாவளியினர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்ச்சியில் அந்த நாட்டு பிரதமரும், இந்தியா வம்சாவளியுமான கமலா பெர்சாத் பிசேசர், மந்திரிகள், எம்.பி.க்கள் மற்றும் உயர் அதிகாரிகள் என 4000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். தான் கொண்டு சென்ற கும்பமேளா புனித நீரை அந்நாட்டு பிரதமர் கமலாவிடம் வழங்கினார்.

2 நாள் பயணமாக டிரினிடாட் டொபாகோ சென்ற பிரதமர் மோடிக்கு அந்த நாட்டின் உயரிய விருதான 'தி ஆர்டர் ஆப் தி ரிபப்ளிக் ஆப் டிரினிடாட் டொபாகோ' விருது வழங்கப்பட்டது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel