பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை, உற்பத்தித் துறையில் சிறப்பு கவனம் செலுத்தி, அனைத்து துறைகளிலும் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்துவதை ஆதரிப்பதற்கும், வேலைவாய்ப்பு கிடைப்பதற்கான திறன்கள் மற்றும் சமூக பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும் வேலைவாய்ப்புடன் கூடிய ஊக்கத்தொகை திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ், முதல் முறையாகப் பணியமர்த்தப்படுபவர்களுக்கு ஒரு மாத ஊதியம் (ரூ.15,000/- வரை) கிடைக்கும் அதே வேளையில், கூடுதல் வேலைவாய்ப்பை உருவாக்குவதற்காக உரிமையாளர்களுக்கு ஓராண்டு முதல் இரண்டு ஆண்டுகள் வரை ஊக்கத்தொகை வழங்கப்படும்.
உற்பத்தித் துறைக்கு மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்ட சலுகைகளும் வழங்கப்படும். 4.1 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, திறன் மேம்பாடு மற்றும் பிற வாய்ப்புகளை எளிதாக்கும் பிரதமரின் ஐந்து திட்டங்களின் தொகுப்பின் ஒரு பகுதியாக 2024-25 மத்திய பட்ஜெட்டில் வேலைவாய்ப்புடன் கூடிய ஊக்கத்தொகைத் திட்டம் அறிவிக்கப்பட்டது, இதன் மொத்த பட்ஜெட் ஒதுக்கீடு ரூ.2 லட்சம் கோடி ஆகும்.
வேலைவாய்ப்பு ஊக்கத்தொகைத் திட்டம் நாட்டில் 3.5 கோடிக்கும் அதிகமான வேலைவாய்ப்புகளை ரூ.99,446 கோடி செலவினத்துடன், 2 ஆண்டுகளில் உருவாக்கப்படுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இவற்றில், 1.92 கோடி பயனாளிகள் முதன்முறையாகப் பணியில் இணைபவர்களாக இருப்பார்கள். இந்தத் திட்டத்தின் நன்மைகள் 2025 ஆகஸ்ட் 01 முதல் 2027 ஜூலை 31 வரை உருவாக்கப்படும் வேலைகளுக்குப் பொருந்தும்.
0 Comments