Recent Post

6/recent/ticker-posts

ஆறு மாநிலங்களில் நான்கு பல்தட ரயில்வே திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் / Union Cabinet approves four multi-track railway projects in six states

ஆறு மாநிலங்களில் நான்கு பல்தட ரயில்வே திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் / Union Cabinet approves four multi-track railway projects in six states

பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் இன்று (31.07.2025) நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு கூட்டத்தில் 4 பல் தட ரயில்வே திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இதன் மொத்த செலவு மதிப்பீடு 11,169 கோடி ரூபாய் ஆகும். இடார்சி - நாக்பூர் 4-வது பாதை, அவுரங்காபாத் (சத்ரபதி சம்பாஜிநகர்) - பர்பானி இரட்டை ரயில்பாதை, அலுவாபரி சாலை- புதிய ஜல்பைகுரி 3-வது, 4-வது பாதை மற்றும் டாங்கோஅபோசி- ஜரோலி 3-வது, 4-வது பாதை ஆகிய ரயில்வே திட்டங்களுக்கு ஒப்புதல் தரப்பட்டது.

அதிகரிக்கப்பட்ட வழித்தடத் திறன், போக்குவரத்து வசதியை கணிசமாக அதிகரிக்கும். இதன் விளைவாக ரயில்வேயின் செயல்பாட்டுத் திறன் அதிகரிக்கும். இந்த பல்தட திட்டங்கள் நெரிசலைக் குறைக்கும். இந்தத் திட்டங்கள் மக்கள் மற்றும் சரக்குப் போக்குவரத்தை எளிதாக்கும்.

மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், மேற்கு வங்கம், பீகார், ஒடிசா, ஜார்கண்ட் ஆகிய 6 மாநிலங்களில் உள்ள 13 மாவட்டங்களை உள்ளடக்கிய இந்த 4 திட்டங்கள், ரயில்வேயின் தற்போதைய கட்டமைப்பை சுமார் 574 கிலோ மீ்ட்டர் அதிகரிக்கும்.

முன்மொழியப்பட்ட பல்தடத் திட்டம், சுமார் 43.60 லட்சம் மக்கள் தொகையைக் கொண்ட சுமார் 2,309 கிராமங்களுக்கான ரயில் போக்குவரத்து இணைப்பை அதிகரிக்கும்.

நிலக்கரி, சிமெண்ட், கிளிங்கர், ஜிப்சம், விவசாயப் பொருட்கள், பெட்ரோலியப் பொருட்கள் போன்றவற்றின் போக்குவரத்தை இத்திட்டம் எளிதாக்கும். ஆண்டுக்கு 95.91 மில்லியன் டன் அளவுக்கு கூடுதல் சரக்கு போக்குவரத்து சாத்தியமாகும்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel